உங்களது முகத்தில் ஏற்படும் பருத்தொல்லையை நீக்க இதோ உங்களுக்கு சில எளிய டிப்ஸ்……

Share this post:

pimples

சிறிது படிகாரத்தை எடுத்து தண்ணீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். அந்த தண்ணீரால் முகத்தை சில நாட்கள் தொடர்ந்து கழுவி வந்தால் முகப்பருவினால் தோன்றிய தழும்புகள் குறையும்.

கறிவேப்பிலை,வெண்ணெய் இரண்டையும் சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தடவி குளித்து வர முகப்பரு குறையும்.

சின்ன வெங்காயத்தை எடுத்து பாலில் வேக வைத்து மையாக அரைத்து பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் குறையும்.

சிறுதேள் கொடுக்கு இலையை அரைத்து ப‌ற்றுப்போட முக‌ப்ப‌ரு குறையும்.

வெண்டைக்காய்ச் செடியின் இலைகளை அரைத்து போட முகப்பரு குறையும்.

சீரகத்தை எருமைப்பால் விட்டு மைய அரைத்து தடவ முகப்பரு மறையும்.

சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவ முகப்பரு குறையும்.

மஞ்சள், சந்தனம், வாகை, புளியாரைச்செடி ஆகியவற்றை அரைத்து முகத்தில் தடவி வர முகத்தில் பரு குறையும்

மஞ்சள், சந்தனம், வாகை, புளியாரைச்செடி ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்தில் அழுத்தி தடவி வர முகத்தில் உள்ள பரு குறையும்.

சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர முகப் பரு நீங்கி குணம் காணலாம்.

வேப்ப இலையை பொடியாக்கி, நீர் கலந்து பசையாக்கி முகத்தில் தடவி வர, முகபருக்கள் குறையும்.

பாசிப்பயறு மாவு, எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவ முகப்பரு நீங்கும்.

நல்லெண்ணெயோடு மிளகுப்பொடி சேர்த்து முகப்பருக்கள் மீது பூசினால் முகப்பரு குறையும்

மிளகு, வெள்ளைப்பூண்டு, துத்தி இலை இவைகளை அம்மி ஒள்றில் வைத்து அரைத்து விழுது பதத்திற்கு வந்தவுடன் அதை பாத்திரத்தில் போட்டு அதனுடன் சிறிது சிற்றாமணக்கு எண்ணெய் ஆறன பிறகு பரு உள்ள இடத்தில் தடவ முகப்பருக்கள் குறையும்.

ஒரு தேக்கரண்டி மிளகு, சிறிதளவு வெள்ளைப் பூண்டு, துத்தி இலை, ஆமணக்கு எண்ணெய் இவைகளை காய்ச்சி ஆறவைத்து முகப்பரு உள்ள இடத்தில் போட்டால் முகப்பரு மறையும்.

கடலை மாவு, வெந்தயம் அடிக்கடி தேய்த்து வந்தால் பருக்கள் நீங்கும்.

முட்டை கோஸ், தக்காளி, கேரட் இவற்றை பச்சையாக அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பருக்கள் போகும்.

பருக்களின் மேல் துளசி சாறு பூசி வந்தால் பருக்கள் மறையும்.

வெள்ளைப்பூண்டையும், துத்தி இலையையும் நறுக்கி நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி பத்திரப்படுத்தி தினசரி பரு மீது தடவி வர முகப்பரு நீங்கும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...