பாட்டு கேட்டா ரிலாக்ஸ் ஆக முடியுமா..?

Share this post:

listen

நமக்கு பிடித்தமான பாடல்களை நாம் கேட்கும் போது நம்மை அறியாமலேயே நமக்குள் சந்தோசம் தோன்றும், உள்ளம் குதூகலத்தில் துள்ளிக் குதிக்கும். அதுவும் பாட்டை ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அதிகம் கேட்பதை பார்த்திருப்பீர்கள். மேலும் யோகா செய்யும் போது மனதை அமைதிப்படுத்தும் வகையில் மியூசிக் போட்டிருப்பார்கள். ஏனெனில் இவ்வாறு உடற்பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை செய்யும் போது பாட்டு அல்லது மியூசிக் கேட்டால் உள்ளம் அமைதி அடைவதோடு, உடலில் சக்தியும் அதிகரிக்கும்.

அதற்காகவே ஜிம் மற்றும் யோகா செய்யும் நேரத்தில் பாட்டை கேட்கிறார்கள். இதனால் டென்சன் இருந்தால் கூட மறைந்து, உள்ளமானது அமைதி பெறும். அப்படி உள்ளத்தை அமைதிப்படுத்த மற்றும் உடலில் சக்தி பெற எவ்வாறெல்லாம் மற்றும் எப்போது பாட்டை கேட்கலாம் என்று பார்ப்போமா!!!

பாட்டைக் கேட்டால்…

1. பாட்டானது வேகமாக, நல்ல பீட்ஸ்ஸோடு எனர்ஜி அளவை அதிகரிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதுவும் காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்றால் மிகவும் சோம்பலாக இருக்கும். அப்போது நல்ல பீட்ஸ் இருக்கும், மிகவும் பிடித்த பாட்டை வீட்டில் இருக்கும் ப்ளேயரில் செட் செய்துவிட்டு எழுந்தால், உடற்பயிற்சி செய்வதோடு, உள்ளமும் உற்சாகமாக இருக்கும்.

2. காலையில் அல்லது மாலையில் ‘ஜாக்கிங்’ அல்லது ‘ரன்னிங்’ செய்வோம். அப்போது மனதை புத்துணர்ச்சி செய்யும் வகையில் இருக்கும் பாட்டை கேட்டுக் கொண்டு உடற்பயிற்சி செய்யலாம். அவ்வாறு கேட்கும் பாட்டின் ஒவ்வொரு வரிகளும் வாழ்க்கையை ரசித்து பாடுவது போல் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இவ்வாறெல்லாம் பாட்டை கேட்டால், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து, மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதோடு, ஆரோக்கியமாகவும் வாழலாம்.

3. வீட்டில் ஏதேனும் சண்டையால் மனமானது பெரும் துன்பத்தில் மற்றும் அழுத்ததில் இருக்கும். ஆகவே அப்போது காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்தால் அழுத்தமானது குறையும். மேலும் புகழ் பெற்ற ‘ரிஹானா’ பாட்டுகளை கேட்டால் மனமானது உறுதியடைவதோடு, மன அழுத்தமும் குறையும்.

4. எப்போதெல்லாம் யோகா செய்கிறோமோ, அப்போதெல்லாம் மனதை ரிலாக்ஸ் செய்யும் வகையில் மென்மையான மியூசிக்கை கேட்கலாம். ஏனெனில் யோகா செய்வ‌தால் மனமும், உடலும் ரிலாக்ஸ் அடைகிறது. ஆகவே அதற்கு ஏற்ற வகையில் மியூசிக்கானது மென்மையாகவும், அமைதியாகவும் இருந்தால் நன்றாக இருக்கும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...