திருமணமாகாத ஆண்களின் மனதில் இருக்கும் ஆசைகள்..!

Share this post:

kazpj

முப்பது வயது என்பது ஒவ்வொரு மனிதனும் ஏறத்தாழ அவனது வாழ்க்கை என்ன? அவன் என்னவாக ஆக வேண்டும் என்ற பாதை அறிந்து பயணம் செய்யும் வயது. இந்த வயதில் கட்டாயம் அடைந்தே தீர வேண்டும் என்ற சில ஆசைகள் அனைவருக்குள்ளும் இருக்கும்.

பொதுவாக நமது இந்தியாவில் முதல் பத்து வயது வாழ்கையை விளையாடியே கழிக்கிறோம், அடுத்த பத்து வயதில் வாழ்க்கை நம் வாழ்வில் விளையாடிவிடுகிறது. அடுத்து வரும் பத்து ஆண்டுகளில், எவனெவனோ விளையாடுவான், கல்லூரி, வேலை, சம்பளம், போட்டி, பொறாமை என்று பலவன கடந்து செல்லும்.

இதெல்லாம் முடிந்து முப்பதை தொட்டு நிற்கும் போது நமது இந்தியாவில் இருக்கும் திருமணமான ஆண்கள் என்னெவெல்லாம் வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா….

தங்களுக்கென்று ஒரு துணை :

பொதுவாக முப்பது வயதை எட்டும் நிலையில் நண்பர்கள் பலரும் திருமணமாகி குடும்பமாக வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள். எனவே, தங்களுடன் இருக்க வேண்டும் என்று ஒரு துணையை தேடுவார்கள். அது காதலாக இருக்கலாம் அல்லது திருமண ஆசையாக இருக்கலாம்.

உடலுறவு :

இப்போதெல்லாம் பருவம் எட்டும் போதே பலருக்குள் உடலுறவு மீதான மோகம் ஏற்பட்டுவிடுகிறது. பின் இவர்களக்கு இருக்காதா என்ன. பொதுவாகவே பாலினம் பாகுபாடு இன்றி, வயது ஏற, ஏற உடலுறவு மீதான ஏக்கமும், மோகமும் அதிகரித்து விடும் என்பது உளவியல் கூற்று.

மாலை பொழுது :

முப்பது வயதை கடந்த ஆண்கள், அவர்களது மாலை பொழுதை அழகாக கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். பொதுவாக அது ஒரே ஒரு நபருடன் தான் கழிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது ஒரு பெண்ணாக இருக்க தான் விரும்புவார்கள். வேறு என்ன காதல் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான்.

விளையாட்டுத்தனம் இருக்காது :

இந்த வயதில் அவர்கள் விளையாட்டுத்தனம் இன்றி, நாடகத்தனம் இன்றி மிகவும் தீவரமாகவும், உண்மையாகவும் வாழ்க்கையை நடத்த விரும்புவர்கள். உறவிற்கு மத்தியில் நேர்மையை மட்டுமே எதிர்பார்பார்கள்.

ஊக்குவிக்கும் பண்புடைய பெண் :

இந்த வயதில் உடல், மோகம் என்பதனை தாண்டி தன்னை ஊக்குவிக்கும் வகையிலான ஒரு பெண்ணின் துணை வேண்டும் என்பதே அவர்களது ஆசையாக இருக்கும்.

தன்னம்பிக்கை :

அந்த பெண் தன்னம்பிக்கையுடன் தன்னுடன் பயணிக்க வேண்டும் என்ற ஆசை, முப்பது வயதை கடந்த ஆண்களுக்கு இருக்கும். இது, வேறு வகையான முதிர்ச்சியான காதலின் வெளிப்பாடாக இருக்கும்.

புது அனுபவம் :

தான் விரும்பும் அந்த பெண்ணுடன் ஒரு புதிய அனுபவம் தரும் வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். நீண்ட நாள் கழித்து மலரும் அந்த காதலில், ஒவ்வொரு நாளையும் மறக்க முடியாத நினைவு கூறும் வகையிலான நாளாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அவர்களுக்குள் இருக்கும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...