மிருகங்கள் மீது கடவுள் அமர்ந்திருப்பது ஏன்?

Share this post:

kirushnan

பொதுவாகவே மனிதர்களுக்கு மிருகங்கள் என்றாலே அலர்ஜி தான், ஆனால் கடவுளின் வாகனமாக பார்த்தால் அவற்றை நாம் வணங்குகிறோம்.

மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா சென்றால் குரங்கை அடித்து விரட்டும் நபர்கள் ஏராளம், அதுவே தெய்வமாக பார்த்தால் ஆஞ்சநேயனாய் மாறி அருள் வழங்குகிறது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆமாம் ஏன் கடவுள் மிருகங்கள் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது என்று என்றாவது யோசித்தது உண்டா?

அதற்கான பொருள் இதுதான்,

மிருகம் தனக்குரிய இயற்கையான குணத்தை ஆண்டவனின் கட்டளைப்படி கடைபிடிக்கிறது. ஆனால், மனிதன் தனக்குரிய நிலையில் இருந்து மாறி மிருக குணத்துடன் அலைகிறான். அவன் மிருக நிலையில் இருந்து, தெய்வ நிலைக்கு உயர வேண்டும். இதனால் தான், மனதில் எழும் எண்ணங்களை மிருகங்களாக உருவகப்படுத்தி, அவற்றை அடக்க வேண்டும் என்ற அடிப்படையில், நமது தெய்வங்கள் அதன் மீது அமர்ந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி மிருகங்கள் தங்கள் இனத்தைப் பெருக்க வரையறை வைத்துக் கொள்வதில்லை. தன்னைச் சார்ந்த எல்லா மிருகங்களுடனும் உறவு கொள்ளும். பகுத்தறிவுஉள்ள மனிதன் அப்படியிருக்கக் கூடாது. தனக்கென ஒருவன் அல்லது ஒருத்தியை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். மிருக குணத்தை விட்டொழிக்க வேண்டும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...