குட்டையாக இருக்கும் ஆண்களா நீங்கள்? உங்களுக்கான பதிவு..

Share this post:

photo bluring

குட்டையாக இருக்கும் ஆண்களுக்கு போதிய தன்னம்பிக்கையும் மனப்பான்மையும் இருப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.  குட்டையாக இருப்பவர்களுக்கும் பல விதமான ஆடை அணியும் விதங்கள் இருக்கிறது. வடிவமைப்பு மற்றும் ஸ்டைல் என்று வரும் போது முடிந்த வரை நேர்கோடுகள் கொண்டு வடிவமைக்கப்பட்ட சட்டைகள் மற்றும் பேண்ட்களை பயன்படுத்துங்கள்.
அவைகளை பின்பற்றினால் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அழகாகவும் இருப்பார்கள்.

நீட்டு வடிவில் இருக்கு வடிவமைப்புகள்

நீட்டு வடிவத்தில் இருக்கும் வடிவமைப்புகள் உங்களை உயரமாக காட்டும். அதற்கு காரணம் நம் கண்கள் அந்த கோடுகளை உங்கள் உயரத்தோடு ஒப்பிட்டு பார்க்க வைக்கும். பாதியிலேயே துண்டித்து போகாமல் கடைசி வரை உள்ள நீட்டு வடிவு கோடுகளை கொண்ட ஆடைகளை கொண்டு உங்களை உயரமாக காட்டுவது ஒரு சிறந்த வழியாகும்.

சரியான அளவிலான ஆடைகள்

முடிந்த வரைக்கும், உங்கள் உடலமைப்புக்கு பொருந்துகின்ற சரியான அளவிலான ஆடைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் அணியும் ஆடைகள் தொளதொளவென இருக்க கூடாது. ஒவ்வொரு ப்ராண்ட் ஆடைக்கும் தனித்துவமான அளவு இருக்கும். அதனால் ஸ்லிம் ஃபிட் வகை ஆடைகளை விற்கின்ற பிராண்டை தேர்ந்தேடுக்க வேண்டும்.

ஒற்றை நிற ஆடைகள்

பல விதமான நிறங்களை கொண்ட ஆடைகளை தவிர்த்தால் உங்கள் தோற்றம் நெறிப்படும். ஒரே குடும்பத்தை சேர்ந்த நிறங்களை கொண்ட ஆடைகளை அணிந்தால் பார்ப்பவர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். முடிந்த வரை நீங்கள் பயன்படுத்தும் அனைத்து ஆடைகளும் ஒரே வகை நிறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் கருமையான நிறத்தை தழுவி இருப்பது நல்லது. இது உங்கள் உயரத்தை சற்று அதிகரித்து காட்டும்.

சரியான ஆடைகள்

ஸ்போர்ட்ஸ் ஜாக்கெட் அல்லது சூட் வகை ஜாக்கெட் அணிந்தால் உங்கள் தோள்பட்டை கனமாக தெரியும். இப்படி இருக்கும் போது அது உங்கள் உயரத்தை அதிகரித்து காட்டும். பேண்ட் அணியும் போது இயற்கையான இடுப்பு கோடுகளில் நிருகுமாறு அணியுங்கள். மாறாக இடுப்புக்கு கீழே அணிவித்தால் உங்கள் கால்கள் குட்டையாக தெரியும். பொதுவாக குட்டையான ஆண்களுக்கு அவர்களின் மற்ற உயரமான பாகங்களை விட அவர்களின் கைகளும் கால்களும் சின்னதாக இருக்கும். அதனால் தான் அவர்கள் குட்டையாக இருக்கிறார்கள். அதனால் உங்கே உடம்பின் மேல் பகுதியில் அணியும் ஆடையின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கொஞ்சம் உயரத்தை அதிகரித்திடுங்கள்

அதிகமாக இல்லாமல், குறைந்த அளவில் கொஞ்சம் உயரத்தை அதிகரிக்க முயற்சி செய்யலாம். அப்படி உங்கள் உயரத்தை அதிகரிக்க சற்று உயரமாக இருக்கும் காலணிகளை அணியலாம். அல்லது லிஃப்ட், தடிமனான காலனி சோல், உயரமான ஷூ போன்ற உபகரணங்களை பயன்படுத்தலாம். இவை அனைத்தினாலும் உங்கள் உயரத்தை சிறு அளவிற்கு உயர்த்திடலாம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...