முதல்முறை காதலனுடன் வெளியே (டேட்டிங்) செல்லும் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள்..!

Share this post:

val6

திருமணத்திற்கு முன்பு, பெண் பார்க்க போவது தான், காதலிக்கும் முன்பு டேட்டிங் செல்லுதல். இது பல தடவைகள்,பல நபர்களுடன் கூட நடக்கலாம். நூறு தடவை பெண் பார்க்கும் போது, நூறு தடவை டேட்டிங் போவது மட்டும் தப்பா என்ன? (சத்தியமா இந்த கேள்விய நான் கேட்கல..,)

முதல் டேட்டிங்கில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் :

டேட்டிங் என்பது மேற்கத்திய கலாச்சாரத்தில் இருந்து வந்த பழக்கம் என்றாலும், நமது ஆண்களுக்கு அவர்களது மரபணுவில் பதிந்த சில கூற்றுகளை மாற்ற இயலாது. கொஞ்சம் சகஜமாக பேசினாலே காதல் என்று காற்றில் பறப்பவர்கள், டேட்டிங் என்ற உடனேயே அஜால், குஜால் எண்ணங்களில் சிறகடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

ஆண்களிடம் பெண்கள் விரும்பும் தோரணைகள்!! உண்மையில், சில டேட்டிங்கில் “அது”வும் இடம் பெறுவது சாதாரணம் ஆகிவிட்ட போதும், ஒரு சில விஷயங்களை பற்றி டேட்டிங் அன்று ஆண்கள் பேசுவதை பெண்கள் விரும்புவதில்லை, அது டேட்டிங்கின் சுவாரஸ்யத்தைக் குறைத்துவிடும் என்று எண்ணுகின்றனர். அவை, என்ன என்று இனிக் காண்போம்…

டேட்டிங் என்பது காதலுக்கான (ஊர் சுற்றுவதற்கான) முதற்படி தானே தவிர, அது திருமணத்திற்கான அச்சாரம் இல்லை என்கின்றனர் பெண்கள். (அதுக்கு தனியா சில மாங்கா பசங்க கிடைப்பாங்க…. நம்ம பசங்க ஜீன்ஸ் போட்டாலும், குடும்ப ஜீன் இன்னும் மாறாமலேயே இருக்காங்க.) எடுத்த எடுப்பில் திருமணத்தை பற்றி பேசி, டேட்டிங்கிற்கு இழிவு ஏற்படுத்த வேண்டாம்.

ஆண்களுக்கு எப்போதுமே யூகிக்கும் திறன் அதிகம். ஆனால், அது பெரும்பாலும் தவறாக தான் இருக்கும் என்பது வேறு விஷயம். டேட்டிங் என்று வெளியில் சென்று விட்டு, இவர்களுக்கு மட்டும் பீர் சொல்லுவார்கள், பெண்களுக்கு பழரசங்கள் ஆர்டர் செய்ய முனைவார்கள். டேட்டிங் வரை வளர்ந்த பெண்மணிக்கு பீர் எல்லாம் ஒரு மேட்டரே இல்ல பாஸ்! எனவே, எந்த விஷயத்திலும் அவர்களிடம் பேசியே முடிவெடுங்கள்.

காரணமே இன்றி, வெறுமனே உரசுவது, தொட்டு தொட்டுப் பேசுவது, கட்டி அணைப்பது, முத்தங்களுக்கு ஆசைப்படுவது போன்றவை நீங்கள் ஒரு சில்வண்டு என்பதை வெளிகாட்டி விடும். எனவே, முதிர்ச்சியாக நடந்துக் கொள்ளுங்கள். (ஆர்டர் பண்ணிட்டு சாப்பாடு வரதுக்குள்ள, ஏன் வெறும் இலைய சொரண்டீட்டே இருக்கீங்க. இலை கிழிஞ்சிட்டா, அப்பறம் சாப்பாடும் சாப்பிட முடியாம போயிடும்!!!) எனவே, பொறுமை முக்கியம்.

எவ்வளவு இடம் இருந்தாலும் நம்ம பசங்க கவர்மென்ட் பஸ்ஸில் போகிற மாதிரி நெருங்கி தான் இருப்பார்கள். டேட்டிங் என்பதே உங்கள் இருவருக்கு மத்தியில் என்றான பிறகு. பின், எதற்கு நெருக்கிக் கொல்லப் பார்க்கிறீர்கள். பெண்கள் மென்மையானவர்கள் என்பதையும் தாண்டி, தங்களை மென்மையாக கையாளும் ஆண்களை தான் பெண்களுக்கு பிடிக்குமாம்.

டேட்டிங் என்பதே நாளைய இணைப்பிற்கான இன்றைய அப்ளிகேஷன், அதற்கு ஏன் முந்தைய அனுபவம் பற்றி எல்லாம் கேட்க வேண்டும்!

டேட்டிங் போன இடத்தில், மிக முக்கியமாக பேசக் கூடாத விஷயம் சம்பளம் பற்றி பேசுவது. இது, நீங்கள் பணத்திற்காக தான் பழக முனைகிறீர்கள் என்ற எண்ணம் தோன்ற கருவாகிவிடும்

Share This:
Loading...

Recent Posts

Loading...