முதலிரவன்று பெண்களின் மனதில் தோன்றும் வேடிக்கையான எண்ணங்கள்….

Share this post:

muthaliravu

திருமணத்தில் போது ஏற்படும் பதட்டம் உச்சி முதல் கால் வரை தொற்றிக் கொள்ளும்.

திருமணம், முதலிரவு போன்றவை மீது ஆசை அலைபாயும். திருமணத்தில் போது ஏற்படும் பதட்டம் உச்சி முதல் கால் வரை தொற்றிக் கொள்ளும். புதிய இடம், பெரிதாய் தெரியாத நபர். அவருடன் முதன் முதலில் படுக்கையை பகிர்ந்துக் கொள்ளும் தருணம்.

தன்னை பற்றி அவர் என்ன எண்ணுவார், அவர் எப்படி நடந்துக் கொள்வார் என்ற பெண்களின் எண்ணம் என எண்ணங்களால் சூழ்ந்திருக்கும் இடம் அது. ஆனால், இவ்விடத்தில் கூட உறவை தாண்டிய சில கேலித்தனமாக, அபத்தமானவற்றை பெண்கள் சிந்திக்கிறார்கள் தெரியுமா?

* முதலிரவின் போது தனது மேக்கப்பை முழுமையாக களைத்துவிடலாமா? வேண்டாமா என்ற எண்ணம் பெண்கள் மத்தியில் ஏற்படுகிறது.

* வெளியிடங்களுக்கு சென்று வேறு ஒருவரது குளியலறையை ஒருமுறை பயன்படுத்தவே சில பெண்கள் மிகவும் தயங்குவார்கள். இதில், நாளையிலிருந்து வேறு ஒரு நபரின் குளியலறையை தான் பயன்படுத்த வேண்டுமா? என்ற எண்ணமும் அவர்களிடம் அதிகம் எழுகிறது.

* தப்பி தவறியும் குறட்டை வந்துவிடக் கூடாது, மானமே போய்விடும் என்று பெண்கள் எண்ணுகிறார்கள். இதனால் முதல் நாளிலேயே தன் மீது ஒரு தவறான எண்ணம் ஏற்படும். இதுவே, கணவன் குறட்டை விட்டால் என்ன செய்வது என்று குழம்புவார்கள்.

* வாய் துர்நாற்றம் என்பது மிகவும் பொதுவானது. கணவரிடம் பேசும் போது வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் அவர் என்ன நினைத்து கொள்வார் என்று ஒரு வெட்கம் பெண்களிடம் ஏற்படுகிறது.

* பெண்கள் தாங்கள் உறங்கும் போதும் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் இருக்கிறதாம்

* எத்தனை நாட்களுக்கு புடவைக் கட்டிக்கொண்டு உறங்க வேண்டும், இரவு உடை அணிந்து உறங்கலாமா, எப்போதிருந்து.. என்பது பற்றியெல்லாம் கூட பெண்கள் யோசிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

* ஒருவேளை காலையில் நேரதாமதமாக எழுந்துவிட்டால் கணவர் வீட்டில் தவறாக எடுத்துக் கொள்வார்களோ… புதிய சூழல் எப்படி இருக்கும் என்பது பற்றி எல்லாம் கூட பெண்கள் யோசிக்கிறார்கள்.

* பெரும்பாலும், முதலிரவன்று தூங்கி எழுந்த பெண்களுக்கு எழும் முதல் எண்ணம், “நான் எங்க இருக்கேன்..?”. பெண்களின் மனது கண்டதை எல்லாம் யோசிக்கும் என்று தெரியும். ஆனால், இந்த அளவிற்கு யோசிக்கும் என்பது இப்போது தான் தெரிகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...