வினோத அந்தரங்க உறுப்புகளோடு வாழ்ந்து வரும் அதிசய மனிதர்கள்!!!

Share this post:

நமது உலகத்தில் ஆச்சரியத்திற்கும், வினோதங்களுக்கும் பஞ்சமே இல்லை. இடங்கள், மனிதர்கள், மிருகங்கள், அறிவியல், விண்வெளி என நம்மை ஆச்சரியப்பட வைக்க எண்ணற்ற விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், மனிதரின் உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் நமக்கு ஆச்சரியம் என்றாலும் கூட, அந்த வினோதத்துடன் வாழும் மக்களுக்கு பெரும் வலியாக இருக்கிறது.

இயல்பான வாழ்க்கையை வாழ முடியாமல், இயல்பான தோற்றம் இல்லாமல். மக்கள் மத்தியில் ஏதோ வேற்றுகிரக வாசியை போல வாழ்வது மிகவும் வலியை தருவதாகும். அதிலும், பிறப்புறுப்பு சார்ந்து நிறைய வினோதத்துடன் வாழும் நபர்கள் என்றால், மருத்துவ உலகமும் சேர்ந்துக் கொண்டு, அவர்களை ஆராய்ச்சி செய்வது கொடுமையிலும் கொடுமை….

பி.ஜி.ஏ.எஸ் பி.ஜி.ஏ.எஸ் (Persistent Genital Arousal Syndrome)
இது ஓர் அரிதான குறைபாடு. சாரா ரிச்சர்ட்சன் எனும் பெண்ணுக்கு இந்த குறைபாடு இருக்கிறது. இதனால், எந்த காரணமும் இன்றியே ஓர் நாளில் இவர் 200-க்கும் மேற்பட்ட தடவைகள் உச்சம் காண்கிறாராம்.

சாதாரணமாக உட்காரும் போது, நடக்கும் போது, பயணிக்கும் போதே என இது நிகழ்கிறது. உடலுறவு கொள்ளும் போது கூட முழுமையாக ஈடுபட முடிவதில்லை. மற்றும் இது எனது இயல்பு வாழ்க்கையை சீரழிக்கிறது என கூறுகிறார் சாரா.
18-1439873029-1peoplewithseriouslystrangeprivateorgans

அடங்காத விறைப்புத்தன்மை
ஆண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது, அதிக நேரம் விறைப்புத்தன்மை இருக்க வேண்டும் என விரும்புவர். இது தாம்பத்திய வாழ்க்கையில் அனைவரும் விரும்பும் ஒன்று தான். ஆனால், வயாகரா போன்ற மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகு கூட நான்கு மணி நேரத்திற்கு அதிகமாக விறைப்பு ஏற்பட்டால் மருத்துவரை காண கூறுகிறார்கள்.

ஆனால், சார்லஸ் லென்னன் என்பவர் தனது ஆணுறுப்பு அளவில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பிறகு, ஏதோ கோளாறினால், பத்து வருடங்களாக விறைப்புத்தன்மையோடு வாழ்ந்து வந்துள்ளார். இதனால், இவர் வெளியிடங்களுக்கு சகஜமாக சென்று வர முடியவில்லை. வாகனம் ஓட்ட முடியவில்லை, ஒருமுறை இவ்வாறு இவர் வெளிசென்றதால் காம இச்சையை தூண்டியதன் பேரில் $4,00,000 கட்டும்படி கோர்ட் தீர்ப்பு வழங்கியதாம்.
download18

இரண்டு பெண்ணுறுப்பு உள்ள அதிசய பெண்
இவர் பெயர் ஹசல் ஜோன்ஸ், இவருக்கு மாதவிடாய் ஏற்படும் போதெல்லாம் கடுமையான வழியை உணர்ந்துள்ளார். அதிகமான இரத்தப்போக்கும் இருந்துள்ளது. பருவ வயதை தாண்டிய பிறகு இவர் உறவில் ஈடுபடும் போதும் கூட கடுமையான வலியை உணர்ந்துள்ளார்.

ஒருமுறை இவரது தோழர், மற்ற பெண்களை போல உனது பிறப்புறுப்பு இல்லை, வேறு மாதிரி இருக்கிறது என கூறிய பிறகு மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்றுள்ளார். அப்போது தான் இவருக்கு இரண்டு பெண்ணுறுப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் இவருக்கு இரண்டு கருப்பை, நான்கு அண்டப்பைகளும் இருக்கிறது.
18-1439873040-3peoplewithseriouslystrangeprivateorgans

இரண்டு கருவறை உள்ள பெண்
இது மிகவும் அரிது என கூறுவதைவிட மிகவும் அபாயமானது என்று தான் கூற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஹன்னா கேர்சே, என்பவருக்கு தான் இந்த பிரச்சனை இருந்தது. இதை மருத்துவ பெயரில் “uterus didelphys” என்று கூறுகிறார்கள். இவர் இரண்டு கருவறை மூலமாக பிரசவித்தார், ஆனால், இரண்டு குழந்தைகள் அல்ல, மூன்று குழந்தைகள். மருத்துவ உலகையே இந்த பிரசவம் வியக்க வைத்தது.
18-1439873046-4peoplewithseriouslystrangeprivateorgans

இரண்டு ஆணுறுப்பு கொண்ட ஆண்
இரண்டு பெண்ணுறுப்பு உள்ள பெண்ணை போலவே, இரண்டு ஆணுறுப்பு உள்ள ஆண் ஒருவரும் இருக்கிறார். ஆன்லைனில் இவர் டைஃபல்லியா டூட் (Diphallia Dude) என்ற பெயரோடு திகழ்கிறார். இந்த பெயரை கொண்டு கூகுள் தேடல் செய்தாலே இவரை பார்த்துவிடலாம். இவர், தான் இதுவரை ஆயிரம் நபர்களோடு உறவு வைத்துக் கொண்டதை பெருமையாக கூறியிருக்கிறார்.
18-1439873052-5peoplewithseriouslystrangeprivateorgans

பெண்ணுறுப்பு இல்லாத பெண்
இரண்டு பெண்ணுறுப்பு, இரண்டு கருவறை என வாழும் பெண்கள் வாழும் இதே உலகில் தான் பெண்ணுறுப்பு இல்லாத ஓர் பெண்ணும் வாழ்ந்து வருகிறார். யூ.கே-வில் வசிக்கும் ஜாக்கி பெக் எனும் பெண்ணுக்கு இந்த குறைபாடு இருக்கிறது. இவரால் கருத்தரிக்க முடியாது, மாதவிடாய் ஏற்படாது என மருத்துவர்கள் கூறிய பிறகு மிகவும் மனம் உடைந்து போனதாக ஜாக்கி கூறியுள்ளார்.
9e309625-de78-47bb-8b7c-1afe86633f93

கருவறையுடன் வாழ்ந்து வரும் ஆண்
பிரிட்டிஷை சேர்ந்தவர் ராப், இவருக்கு 37 வயது. ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது தான், இவருக்கு பெண்களுக்கான அந்தரங்க உறுப்பான கருவறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு பொதுவான ஆண்களுக்கு இருக்கும் ஆணுறுப்பும் இருக்கிறது, அதோடு சேர்ந்து கருப்பை, கருப்பை வாய், கருமுட்டை குழாய்களும் இருக்கின்றன.
18-1439873063-7peoplewithseriouslystrangeprivateorgans

Share This:
Loading...

Recent Posts

Loading...