உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி உங்கள் கைரேகை என்ன சொல்கிறது

Share this post:

ஜோதிடத்தில் பல வகைகள் மற்றும் பிரிவுகள் இருக்கின்றன. இதில், கைரேகை, நாடி, கிளி, குறி சொல்வது என அனைத்து வகைகளிலும் உங்கள் வாழ்க்கையின் அனைத்து கட்டங்கள் குறித்தும் கூறப்படுவது உண்டு. நம்மில் பெரும்பாலும் வாழ்க்கையில் முதல் முறை ஜோதிடம் பார்ப்பதே திருமணத்தின் போது தான்.

கை ரேகை எனும் போது சில முக்கிய ரேகைகள் பற்றி தான் நாம் அறிந்திருப்போம். ஆயுள் ரேகை, இருதய ரேகை, சூரிய ரேகை, ஞான ரேகை என இதில் பலவனஉண்டு. இதில், இருதய ரேகையின் நிலையைக் கொண்டு உங்கள் காதல் மற்றும் இல்வாழ்க்கை குணாதிசயங்கள் பற்றி எப்படி அறிவது என்று தான் இனி நாம் காணவிருக்கிறோம்.

மூன்று வகைகள்
உள்ளங்கை ரேகையில் இருதய ரேகை எனும் ரேகையை வைத்து தான் உங்கள் காதல் மற்றும் இல்வாழ்க்கை எப்படி அமையும் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது. இதில் மொத்தம் மூன்று வகைகள் தான் இருக்கின்றன. ஒன்று இரு கை ரேகைகளும் சமநிலையில் இருப்பது. அல்லது வலது (அ) இடது இருதய ரேகைகள் மேலோங்கி இருப்பது.
rekai6

எந்த வயதில் திருமணம் ஆகும்
மேலும் இருதய ரேகையின் மேலே ஓரத்தில் இருக்கும் ரேகைகளை வைத்து உங்களுக்கு எந்த வயதில் திருமணம் ஆகும் என்றும் கணிக்க முடியும் என்று ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள்.
rekai2

சமநிலை
உங்கள் இரு கைகளையும் சேர்த்து வைத்து பார்த்தால்ல் உங்கள் இருதய ரேகை சமநிலையில் இருக்கிறது எனில் நீங்கள் மிகவும் கனிவானவர், உணர்ச்சிவசப்படக் கூடியவர், உங்களது பொது அறிவு மேலோங்கி இருக்கும். திடீரென நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு பிடிக்காது. அனைவரும் பார்த்து வைக்கும் பெண்ணை தான் திருமணம் செய்துக் கொள்வீர்கள். மேலும் உங்கள் வீட்டில் உங்களது மனைவியை அனைவருக்கும் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
rekai3

வலது கை ரேகை மேலோங்கி
வலது இருதய ரேகை மேலோங்கி இருந்தால், பெரியவர்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். வயது மூதோர் மீது உங்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும். சூழ்நிலை மற்றும் மக்களின் நிலையை பற்றி நன்கு அறிந்துக் கொள்ளும் திறன் கொண்ட நீங்கள், மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று கருதி செயல்பட மாட்டீர்கள். அதாவது நீங்கள் பழைய பஞ்சாங்கம் போன்று செயல்படாமல், உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை தேர்வு செய்து வாழும் தன்மை உடையவர்.
rekai4

இடது கை ரேகை மேலோங்கி இருந்தால்
இடது கை ரேகை மேலோங்கி இருந்தால், நீங்கள் கோபக்காரராக இருப்பீர்கள். சவால்களை எதிர்த்து போராடும் குணம் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு உணர்சிகரமான காதல் தான் அமையும். நீங்கள் தேர்வு செய்யும் துணை மாணவராக தான் பெரும்பாலும் இருப்பார்கள்.
rekai5

கருத்து
இவை அனைத்தும் முற்றிலும் பொய்யா? உண்மையா? என்று கூறுவது கடினம். நாடி, கிளி, எண், ரேகை என அவரவர் பார்க்கும் ஜோதிடம் தான் உண்மை என அவரவர் கூறுகிறார்கள். இன்றைய தினத்தில் காதல் திருமணங்கள் தான் அதிகம் நடக்கின்றன. எனவே, இவற்றுக்கு எல்லாம் மேலே காதல் எனும் ரேகை உங்கள் மனதை நன்கு பிணைப்பாக பிடித்திருந்தால் உங்கள் இல்வாழ்க்கை, காதல் வாழ்க்கை அனைத்தும் இன்பமாகவே திகழும்.
rekai6

Share This:
Loading...

Recent Posts

Loading...