WWE தி அண்டர்டேக்கர் பற்றிய நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்யமான தகவல்கள்!!

Share this post:

09-1452322305-2interestingfactsaboutwrestlertheundertaker

தி அண்டர்டேக்கர், 90-களில் வளர்ந்த குழந்தைகளை அதிகம் குதூகலம் அடைய வைத்த பெயர், மிகவும் அச்சுறுத்திய பெயரும் கூட. பேய் மனிதர், ஏழு உயிர்கள் உண்டு என்று அவர்கள் மனதில் ஓர் அதிசய பிறவியாக திகழ்ந்து வந்தவர். இவரது ஒன்றுவிட்ட சகோதரன் தான் கேன் என்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்தது தான்.

இவர் மூன்று முறை திருமணம் செய்துள்ளார், ஜோடி லின் – Jodi Lynn (m. 1989; div. 1999), சாரா பிரான்க் – Sara Frank (m. 2000; div. 2007) மற்றும் மிச்சேல் மேக் கூல் – Michelle McCool (m. 2010). இவருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர். அண்டர்டேக்கருக்கு டான் ஜார்டைன் எனும் மல்யுத்த சாம்பியன் வீரர் தான் பயிற்சி கற்பித்தார்.

இயற்பெயர்
தி அண்டர்டேக்கர் என்று ரிங் பெயர் கொண்ட இவரது இயற்பெயர் மார்க் வில்லியம் காலவே (Mark William Calaway). இவருக்கு டேவிட், மைகேல், பவுல் மற்றும் திமோத்தி என்று நன்கு சகோதரர்கள் இருக்கிறார்கள்.

புனைபெயர்கள்
“மாஸ்டர் ஆப் பெயின்”, “மார்க் கல்லோவுஸ்”, “மீன் மார்க்”, “டைஸ் மோர்கன்”, “தி பினிஷர்”, “தி ஃபினோம்”, “தி டெட்மேன்”, “தி அமெரிக்கன் பேட் ஆஸ்”, “பூகர் ரெட்”, “தி ரெட் டெவில்”, “பிக் ஈவிள்”, “தி மேன் ப்ரம் த டார்க் சைட்”, “தி லார்ட் ஆஃப் டார்க்னஸ்”, “தி டெமோன் ஆஃப் டெட் வேலி”, “தி கன்சைன்ஸ் ஆஃப் டபிள்யு.டபிள்யு.ஈ” இதற்கெல்லாம் மேல் தான் WWE ரிங் பெயரான தி அண்டர்டேக்கர் என உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

பாஸ்கெட்பால் வீரர்
பள்ளி, கல்லூரி பயிலும் போது பாஸ்கெட்பால் வீரராக விளையாடி வந்தார் அன்டர்டேக்கர். இவர், பாஸ்கெட்பால் போட்டியில் சிறந்த வீரராக திகழ்ந்து வந்தார்.

வேர்ல்ட் கிளாஸ் சாம்பியன்ஷிப் மல்யுத்தம்
அண்டர்டேக்கர் முதன் முதலில் 1984-ம் ஆண்டு பங்குபெற்றது வேர்ல்ட் கிளாஸ் சாம்பியன்ஷிப் மல்யுத்தம் எனப்படும் WCCW-ல் தான். இங்கு இவரது ரிங் பெயர் டெக்சாஸ் ரெட் என்று இருந்தது. பிறகு இங்கிருந்து பல மல்யுத்த போட்டிகளில், அமைப்புகளில் போட்டியிட்டு வந்தார் அண்டர்டேக்கர்.

WWF / WWE-ல் இணைந்தார்
Kane the Undertaker என்ற பெயருடன் தான் முதன் முதலில் உலக மல்யுத்த சண்டை அமைப்பில் இனைந்து போட்டியிட்டு வந்தார். ஆரம்பம் முதலே மிகவும் அச்சுறுத்தும் வகையில் தான் போட்டியில் பங்கேற்று வந்தார். இவரது ஆட்ட முறை மற்றும் அடிக்கும் யுக்திகளினால் இரசிகர்கள் கூட்டம் இரவது போட்டியின் நாட்களில் அதிகரிக்க ஆரம்பித்தனர்.

புரளிகள்
இவருக்கு ஏழு உயிர்கள் இருக்கின்றன, இவர் இறந்து மீண்டும் எழுந்து வந்தார் என இவரை ஒரு பேய் மனிதர், அதிசிய மனிதன் போன்று பல கட்டுக்கதைகள் இரசிகர்களை ஈர்க்க அவிழ்த்துவிடப்பட்டன.

ரெஸில்மேனியா ஸ்ட்ரீக்
ஏழாவது ரெஸில்மேனியாவில் முதன் முதலில் பங்கேற்றது முதல் தொடர்ச்சியாக 29வது ரெஸில்மேனியா வரை 21 ஆண்டுகள் அண்டர்டேக்கர் தோல்வியடையாமல் சாதனை புரிந்தார். இந்த வெற்றிப்பாதைக்கு 2014-ம் ஆண்டு முற்றுபுள்ளி வைத்தார் பிராக் லெஸ்னர்.இந்த ஆட்டத்தின் போது மிகுந்த பாதிப்பினால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அண்டர்டேக்கர்.

ஆட்டநுணுக்கங்கள்
– தி அன்டர்டேக்கராக சோக்ஸ்லாம் ஹெல்ஸ் கேட் (மேம்படுத்தப்பட்ட கோகோபிளாட்டா) – 2008-தற்போதுவரை தி லாஸ்ட் ரைட் (உயர்த்தப்பட்ட பவர் பாம்) – 2000-2004 டூம்ஸ்டோன் பைல் டிரைவர் – மீன் மார்க் காலஸாக காலஸ் கிளட்ச் (தாடை பிடி) ஹார்ட் பன்ச்.

அண்டர்டேக்கரின் தனித்துவ யுக்திகள்
பிக் பூட் கார்னர் குளோத்ஸ்லைன் ஃபுஜிவேரா ஆம்பர் கிளோடைன் லெக் டிராப் எதிரியின் மார்பில் அடிப்பது கையை விட்ட நிலையில் மேல் கயிற்றிலிருந்து சூசைட் டிரைவ் ஓல்டு ஸ்கூல் (ஆர்ம்ஸ் டிவிஸ்ட் ரோப்வால்க் சோப்) ரிவர்ஸ் எஸ்டிஓ ரன்னிங் டிடிடீ ரன்னிங் ஜம்பிங் லெக் டிராப் ரன்னிங் லீப்பிங் குளோத்ஸ்லைன் சைட்வாக் ஸ்லாம்.

நுழையும் போது இசைக்கப்படும் இசைக் கோப்புகள்
“மிராக்கிள் மேன்” ஓஸி ஆஸ்பர்ன் (என்ஜேபிடிபிள்யு) “சைனா ஒயிட்” ஸ்கார்பியன்ஸ் (என்டபிள்யுஏ / டபிள்யுசிடபிள்யு) “தி கிரிம் ரீப்பர்” ஜிம் ஜான்ஸ்டன் “கிரேவியார்ட் சிம்பொனி” ஜிம் ஜான்ஸ்டன் (1995-1998) “டார்க் சைட்” ஜிம் ஜான்ஸ்டன் (1998-1999) “மினிஸ்ட்ரி” ஜிம் ஜான்ஸ்டன் (1999) “அமெரிக்கன் பேட் ஆஸ்” கிட் ராக் (2000) “ரோலின்’ (ஏர் ரெய்ட் வெகிக்கிள்)” லிம்ப் பிஸ்கிட் (2000-2002, 2003) “டெட் மேன் ஜிம் ஜான்ஸ்டன் (2002) “யூவார் கான்ன பே” ஜிம் ஜாம்ஸ்டன் (2002-2003) “கிரேவியார்ட் சிம்பொனி” ஜிம் ஜான்ஸ்டன் (2004-தற்போதுவரை)

Share This:
Loading...

Related Posts

Loading...