உங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளனவா? திடுக்கிடும் சில அறிகுறிகள்!

Share this post:

பலருக்கு தங்கள் உடலில் புழுக்கள் அதிகம் உள்ளது என்று தெரியாமலேயே உள்ளனர். ஒட்டுண்ணிகளான இந்த புழுக்கள், நம் உடலினுள் பல வழிகளில் நுழைந்து, நாம் உண்ணும் உணவுகளை உட்கொண்டு, நம்மை மெதுவாக அழிக்கும். நம் உடலைத் தாக்கும் ஒட்டுண்ணிகளில் பல வகைகள் உள்ளன.

வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க சில சூப்பரான கை வைத்தியங்கள்! இந்த ஒட்டுண்ணிகளான புழுக்களை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்ற வேண்டும். இல்லாவிட்டால், அவை நம்மை கொஞ்சம் கொஞ்சமாக உட்கொண்டு அழிக்க ஆரம்பிக்கும். அதற்கு முதலில் ஒருவர் தங்களில் உடலில் புழுக்கள் இருந்தால் தென்படும் அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

கண்களிலும் நாடா புழுக்கள் தாக்குமாம்! இங்கு ஒருவரது உடலில் புழுக்கள் அதிகமாக இருந்தால் தென்படும் அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். குடலில் உள்ள ஒட்டுண்ணிகளை இயற்கையான வழியில் அழிக்க உதவும் உணவுகள்!

அடிவயிற்று வலி
ஒட்டுண்ணிகள் சிறு குடலின் மேல் வாழ்ந்து, எரிச்சல், அழற்சி மற்றும் வலியை உண்டாக்கும். மேலும் புழுக்கள் கழிவுப் பொருட்கள் உடலில் இருந்து வெளியேறுவதில் தடையை ஏற்படுத்தி, அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும். ஒருவேளை உங்களுக்கு அடிவயிற்று வலி அதிகமானால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
stomach01

மலப்புழை அரிப்பு
இது அனைவருக்கும் தெரிந்த ஓர் அறிகுறி தான். அது மலப்புழையில் அரிப்பு, குடைச்சல் அல்லது எரிச்சல் ஏற்படுவது. குறிப்பாக இம்மாதிரியான அரிப்பு இரவில் ஏற்படும் போது தூக்கத்திற்கு இடையூறு ஏற்பட்டு, மறுநாள் மிகுந்த களைப்பை அடையக்கூடும்.

சோர்வு மற்றும் பலவீனம்
வயிற்றில் புழுக்கள் அதிகமாக இருந்தால், அவை உடலின் சத்துக்களை உறிஞ்சி, ஊட்டச்சத்துக் குறைபாட்டை ஏற்படுத்தி, உடலை பலவீனமாக்கிவிடும். உடல் பலவீனமானால், சோர்வு அதிகரித்து, நினைக்கும் வேலையை கூட செய்ய முடியாமல் டென்சன் அதிகரிக்கும். எனவே வாரத்திற்கு ஒருமுறை வயிற்றுப் புழுக்களை கொல்லும் முறையை மேற்கொள்ளுங்கள்.
stomach03

Share This:
Loading...

Recent Posts

Loading...