சிங்கள மாணவனை தாக்கி கையில் ‘தமிழ்” என எழுதிய நபர்கள் : தலவாக்கலையில் சம்பவம்!!

Share this post:

tamil0

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களால் சிங்கள மொழி பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மதிக்க தக்க மாணவன் கடுமையாக தாக்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் 25.11.2016 அன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த 23 ம் திகதி திங்கட்கிழமை அன்று வழமையாக குறித்த மாணவன் பாடசாலையில் இருந்து தனது வீட்டுக்கு செல்லும் போது இனந் தெரியாத நபர்கள் இவரை தாக்கியுள்ளனர்.

இதன்போது குறித்த மாணவன் மயக்கமடைந்து சில நிமிடங்களுக்கு பின் தனது வீட்டுக்கு சென்றதாக மாணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். தாக்கிய நபர்கள் குறித்த மாணவனின் வலதுகரத்தில் “தமிழ்” என எழுதிவிட்டு சென்றதாக மாணவன் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனை மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபடவுள்ளதாக லிந்துலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

Share This:
Loading...

Related Posts

Loading...