அவுஸ்திரேலிய குடியுரிமை பெற வாய்ப்பு இதோ ? இது உங்களுக்கான நற் செய்தி..!

Share this post:

 

avu
australia’s citizenship test அவுஸ்திரேலிய குடியுரிமைப் பரீட்சையில் மாற்றம் கொண்டுவரப்படலாமென The Daily Telegraph செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய குடியுரிமை பெறும் ஒருவர் அதற்கான பரீட்சை ஒன்றை எழுத வேண்டும். 20 கேள்விகளைக் கொண்ட இப்பரீட்சையில் அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்ட பல பொது அறிவுக் கேள்விகள் இடம்பெறுவது வழக்கம்.

எனினும், இனிவரும் நாட்களில் அவுஸ்திரேலிய குடியுரிமைப் பரீட்சைக் கேள்விகளை மாற்றியமைக்க அரசு திட்டமிட்டு வருவதாக The Daily Telegraph செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி குடியுரிமைப் பரீட்சை எழுதும் ஒருவர் அவரது பின்னணி மற்றும் குடும்பம் சம்பந்தமான கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டியிருக்குமென குறிப்பிடப்படுகின்றது.

குறிப்பாக அவரது பணி விபரங்கள், ஆங்கிலப்புலமை மற்றும் பாடசாலை விபரங்கள் உள்ளடக்கப்படலாம் என அந்த செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் குறித்த நபர் அவுஸ்திரேலிய வாழ்க்கைச் சூழலுக்கேற்ப தன்னையும் குடும்பத்தினரையும் மாற்றியமைத்திருக்கிறாரா என்பதை அறிந்து கொள்வதுடன் தீவிரவாத எண்ணம் கொண்டவரா என்பதையும் அறிந்து கொள்ள முடியும் என அரசு நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share This:
Loading...

Related Posts

Loading...