விடுதலைப்புலிகளின் தலைவரை ஏன் நினைவுகூர முடியாது..? பிரபாகரனுக்கு ஆதரவாக மஹிந்த தரப்பு..!

Share this post:

 

vaa0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவு தரப்பான கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நாட்டில் இரண்டு முறை கிளர்சியில் ஈடுபட்ட விஜேவீரவை நினைவு கூர முடியுமெனில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை ஏன் நினைவுகூர முடியாது?
என கேள்வியெழுப்பியுள்ளார்.

எனினும், மாவீரர் அனுஷ்டிப்பு என்ற போர்வையில் தனித் தமிழீழத்தை அனுஷ்டிப்பதை எதிர்ப்பதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் இரண்டு முறை கிளர்ச்சிகளை மேற்கொண்ட விஜேவீரவின் மறைவை அனுஷ்டிக்கின்றனர்.

இதற்கு எந்த தரப்பினரும் தடை எதுவும் விதிக்கவில்லை மறுப்பும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், பிரபாகரன் உயிர்நீத்த தினத்தை அனுஷ்டிப்பதில் என்ன தவறு? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜே.வி.பி. ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், யுத்தத்தில் உயிரிழந்த பொது மக்களை நினைவுகூருவது அனைவரதும் தார்மீக கடமையாகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிரிழந்த தினம் அனுஷ்டிக்கப்படலாம். எனினும், இலங்கைக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தவர்களை நினைவுகூர முடியாது.

அத்துடன், தனி தமிழீழத்தை நினைவு கூருவதும் ஏற்று கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் குறித்த இரு விடயங்களும் நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்று என மேலும் தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...