நடிகர் சங்க வெட்டு குத்து…! காரணம் ஒரு பெண்..!! விஷாலின் ஆத்திரத்திற்கு நிஜ காரணம்..?!

Share this post:

visaal

நம்பவே முடிய வில்லை.. நடிகர் சங்கத் தேர்தலின் போது கூட இல்லாத வன்முறை வெறியாட்டம் நேற்று பொதுக் குழு மீட்டிங்கில் நடந்துள்ளது கொலைவெறித்தாக்குதல்.

என்னதான் காரணம்..? இரண்டு விதமாகப் பார்க்கிறார்கள் நடிகர் சங்க மூத்த உறுப்பினர்கள் சிலர். ஒன்று நடிகர் சங்கம் இரண்டு கட்சிகளின் அசுரப்பிடியில் சிக்கியுள்ளதாம். திமுக சார்பில் பூச்சி முருகன், திமுக மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், உதயநிதி ஸ்டாலின் போன்றவர்கள் விஷாலை பின்னிருந்து இயக்குவதாகவும்..தாணு தலைமையில் சரத்,ராதாரவி,சிம்பு ஒரு அணியாகவும் செயல்படுகிறார்கள்.

இந்த இரு அணிகளும் தான் மோதிக் கொள்கிறது என்கிறார்கள்…! இன்னொரு கருத்து முற்றிலும் வேறு மாதிரியாக இருக்கிறது. நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் விஷாலுக்கும் காதல் இருந்து திருமணம் வரை சென்றது.

விஷாலின் பழி வாங்கும் நடவடிக்கை பிடிக்காமல் அவரை பிரிந்து விட்டார் வரலட்சுமி..! அதன் பின் விஷாலின் எதிரியான சிம்புவுடன் நெருக்கமானார். பார்ட்டியில் ரொம்பவே குழைகிறார். செல்பி எடுத்து வலைத்தளங்களில் பதிவிடுகிறார். டுவிட்டரில் சிம்பு பற்றி ஏகத்துக்கும்புகழ்ந்து தள்ளுகிறார்.

இது விஷாலுக்கு கடுமையான மன உளைச்சலையும்..கடும் ஆத்திரத்தையும் உண்டாக்கிவிட்டது. அதன் விளைவாகவே சரத்குமார்,மற்றும் ராதாரவியை நடிகர் சங்கத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கி இருக்கிறார்என்று புது கருத்தையும் சொல்கிறார்கள்..!! ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். கூத்தாடியே ரெண்டு பட்டா..?

Share This:
Loading...

Related Posts

Loading...