மது மாது…! உதவி இயக்குனர்களை பட்டினி போட்ட அந்த இயக்குனரின் இன்றைய நிலை..? ஐயோ..!

Share this post:

iyakku

அந்த இயக்குனர் சாதாரன குடும்பத்தை சேர்ந்தவர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

சினிமா ஆசையில் சென்னைக்கு ஓடிவந்து உதவி இயக்குனர் ஆவதற்கு கடும் முயற்சிகள் செய்தார். பசி பட்டினி.. தங்குவதற்கு கூட இடம் இல்லாமல் கஷ்டப் பட்டார்.

அதன் பின் ஐந்து வருட போராட்டத்திற்குப் பின் உதவி இயக்குனர் ஆனார். அடுத்தாக ..ஓரிரு படங்களுக்கு கதையும்.. வசனமும் எழுதும் வாய்ப்பு பெற்றார். மெல்ல இயக்குனர் அவதாரம் எடுத்தார். ள

இரண்டு,மூன்று படங்கள் தோல்வி.. அதன் பிறகு தனது பெயரை
கோயில் பெயரில் மாற்றி கொண்டார் .

ஒரு படம் யாகும் வாய்ப்பு கிடைத்தது. கோட்டை கட்டிய இயக்குனரின் இரண்டாவது படத்தின் சாயலில் அந்தப் படம் லொள்ளு கலந்து வர படம் ஹிட்.

அடுத்தடுத்த படங்கள் அந்து சேர்ந்தது.. நண்பர்கள் கூட்டமும் வந்து சேர .தனி ஆபீஸ், தனி வாழ்க்கை மது, விருந்துகள், பார்ட்டிகள் என அமர்க்களமாக வாழ்ந்தார்.

ஆனால் அவரிடம் வேலை பார்ப்பவர்களுக்கு பச்சை தண்ணீர் கூட இல்லையாம். மதிய உணவிற்கு சாப்பிட வீட்டிற்கு போய்விடுவார் இயக்குனர் மாலை நான்கு மணிக்கு வருவார் அதுவரை உதவி இயக்குனர் பட்டினி கிடக்க வேண்டுமாம்.

அவர் வந்த பின்பே காசை நீட்டுவார் ஆப்பீஸ் பையன் பொட்டலம் சாப்பாடு வாங்கி வருவார் ஓட்டுனருக்கு சம்பளமே கொடுபதில்லையாம்..

நான்கு, ஐந்து மாசம்.. அந்த ஓட்டுனரே வெறுத்துப்போய் விடுவார். சண்டைபோட்டுகத்தும் ஓட்டுனர்களுக்கு மட்டும் பயந்து போய் சம்பளம் கொடுத்து அனுப்பி விடுவாராம்.

உதவி இயக்குனர்களுக்கும் சம்பளமே கிடையாதாம். அவ்வப்போது எதோ போனால் போகிறது என்று பிச்சை போடுவார் என்கிறார்கள்.

இவர் படங்களில் தொடர்ந்து நடிக்கும் புஷ்டி நடிகைகளுக்கு தாராளமமாக வீடு கூடு கூட வாங்கி கொடுப்பாராம். இரவானால் மீண்டும் நண்பர்கள் பாட்டிலோடு கூடி விடுவார்கள்.

பத்தாயிரம் ரூபாய் பாட்டில் அசைவ உணவுகள், என ஆபீஸ் அமர்க்களப் படும். வெளியே உதவி இயக்குனர்கள் பட்டினி கிடப்பார்கள்.

இரவு பனிரெண்டு, ஒரு மணிக்கு பார்ட்டி முடியும் அப்போதான் உதவி இயக்குனர்கள் சாப்பிட முடியும்..! இவர் சொந்தப் படங்கள் எடுத்தார்.

நஷ்டம்…நஷ்டம்..நஷ்டம்..! ஒரு ஜாம்பவான் நிறுவனம், உச்ச நடிகரை வைத்து படம் எடுத்தது. அந்த படத்தின் உரிமையை செங்கல்பட்டு ஏரியா வாங்கினார்.

அதிலும் முறைகேடுகள். ஓட ஓட அடித்து விரட்டியது அந்த ஒளி நிறுவனம். முடிந்தது ஆட்டம். இன்று கார் இல்லை. வீடு இல்லை. உதவி இயக்குனர்கள் இல்லை. சாப்பிட்டியா என்று கூட கேட்க நாதி இல்லை.

யாருக்கும் தெரியாமல் பஸ்ஸில் போய் வருகிறாராம் இயக்குனர்..! ஆடாதடா ஆடாதடா மனிதா..! பாடுதான் நினைவிற்கு வருகிறதாம்..!

Share This:
Loading...

Related Posts

Loading...