நான் சின்னப் பொண்ணு… லவ்னா என்னன்னே தெரியல..அவர் கேட் டார் மறுக்கமுடியல -கண்ணீருடன் அமலாபால் !!

Share this post:

amalaa
அமலாபால் என்ன பேசினாலும் அது விவகாரமாகிவிடுகிறது. பொண்ணு இப்போ ரொம்பவே பிஸி. விளம்பரப் படங்கள், சினிமா என்று படுபிஸி.

கூடவே பள்ளித்தோழன் பாதுகாவலாக இருக்கிறார். முன்னை விட அமலா ரொம்ப அழகாகி விட்டார். முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.

அவர் தான் சமீபத்தில் இப்படி ஒரு அறிக்கை விட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். “நான் ரொம்ப ரொம்ப சின்னப் பொண்ணு காதல்னா என்னன்னு கூட தெரியாதுங்க..

ஸ்கூல் முடிச்சதுமே நடிக்க வந்துட்டேன்.. அப்போதான் இயக்குனர் விஜயை சந்தித்தேன் அவர் படத்தில் நடித்தேன். தெய்வதிருமகள் படத்தில் நடித்த போது என்னையே பார்ப்பார், சிரிப்பார், நானும் சிரிப்பேன்.

சூட்டிங் நடக்கும் போது ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடுவோம் ..என் போன் நம்பர் கொடுத்தேன் சூட்டிங் இல்லாத நேரத்துல பேசுவார்.

அன்பா விசாரிப்பார். எனக்கு அது ரொம்ப பிடிக்கும்..அப்புறம் ஒருநாள் லவ் பண்றேன்னு சொன்னார். எனக்கு அதுக்கு அர்த்தம் கூட தெரியாது.

நானும் லவ் பண்றேன்னு சொன்னேன். அப்புறம் தான் காதல்னா என்னனு தெரிஞ்சுது..! சரி நல்ல இயக்குனர், அன்பானவர்னு லவ் பண்ண ஆரம்பிச்சோம்.

தலைவா படம் முடியும் போது கல்யாணம் பண்ணலாமான்னு கேட்டார். எனக்கு ஒன்னும் புரியல.. அம்மாகிட்டே பேசுங்கன்னு சொன்னேன்.

கல்யாணம் ஆயிடுச்சு. நான் சினிமாவில் எதுவும் சாதிக்கவே இல்லை. ஆனா கல்யாணம் ஆகிடுச்சு. அப்புறம் பிரிவும் வந்துடுச்சு.

என்னை அதிகமா லவ் பண்ணிட்டார் அதுதான் பிரச்னை. நானும் அவரை இப்பவும் லவ் பண்றேன். ஆனா என்ன பண்றது..!

என்று வருத்தப்பட்டுள்ளார் அழகுப் பொண்ணு அமலாபால்..! ஏங்க அமலாபால் என்ன சொல்ல வர்றாருன்னு உங்களுக்கு ஏதாவது புரியுதா..?

Share This:
Loading...

Related Posts

Loading...