20 வருடங்களுக்கு மேல் அசைவற்று படுத்துக் கிடக்கும் ஒரு நல்ல ஹீரோ…! காரணம் ஒரு நடிகை..!?

Share this post:

 

hr

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் அறிமுகங்கள் என்றாலே தமிழ்திரையுலகை ஒரு கலக்கு கலக்கிவிட்டுத்தான் ஓய்வார்கள்.

அந்த அளவிற்கு ஒரு ராசி மிக்க இயக்குனர் அவர். அதே போல தன்னிடம் வேலை செய்யும் உதவி இயக்குனர்களை ஹீரோவாக்கி அழகு பார்ப்பதும் அவரே தான்.

பாக்கியராஜ், மணிவண்ணன்,ரங்கராஜ், சித்ராலட்சுமணன் இப்படி நிறைய உதாரணங்கள் உண்டு.

அப்படிதான் பாபு என்கிற உதவி இயக்குனரையும் ஹீரோவாக்க முடிவு செய்து என் உயிர் தோழன் படத்தின் மூலம் கதாநாயகன் ஆக்கினார்.

படமும் நன்றாக போனது. பாபு ஹீரோ ஆனார். இரண்டாவது படம் இயக்குனர் விக்ரமன் இயக்கிய பெரும் புள்ளி. பாபு துடிப்பான இளைஞர். அழகானவர்.

பெரிய அளவில் சாதித்து சூப்பர் நடிகராக உருவாக வேண்டும் என்று கனவு கண்டார். கூடவே கொஞ்சம் பெண் சபலமும் கனவாக இருந்தது.

பெரும் புள்ளி சுமார் படம் தான். ஆனாலும் பாபுவிற்கு பாதிப்பு இல்லை. மூன்றாவது படமும் வந்தது..கூடவே சனியும்..!

அந்த படத்தின் ஹீரோயின் மேல் பாபுவிற்கு ஒரு கண். சூட்டிங் முழுக்க அந்த நடிகை மீதே கண்ணாக இருந்தார்…! அன்று சண்டைக் காட்சி.

அவுட் டோரில் படபிடிப்பு. ஹீரோயினும் ஸ்பாட்டில் இருக்கிறார். ஒரு பெரிய பாறையில் இருந்து பாபு டைவ் அடித்து சண்டை போட வேண்டும், இது காட்சி. டூப் நடிகர் ரெடியானார்.

ஆனால், பாபு அந்த இயக்குனரிடம் அடம் பிடித்தார். டூப் வேண்டாம் நானே டைவ் அடிக்கிறேன் என்றார். பயந்துவிட்டார் ஸ்டன்ட் மாஸ்டர். இயக்குனரும் வேண்டாம் என்றார். ஆனால் கேட்கவில்லை ஹீரோ.

அடம் பிடித்தார். ஹீரோயினும் வேணாம் பாபு. டூப் நடிகரே குதிக்கட்டும் என்று கூறியும் நான்தான் குதிப்பேன் என்று அடம்பிடித்து குதித்தார்.

பிசகியது..முதுகு. தண்டுவடத்தில் சரியான அடி..!! அம்மா என்று கத்தினார் ஹீரோ..அலறினார்கள் படபிடிப்புக் குழுவினர்.

தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.. ஸ்பைனல் கார்ட் அவுட் என்று.!

கழுத்துக்கு கீழ் மரத்துப் போனது..எவ்வளவோ செலவு..! ம்ஹும் ஒன்று நடக்கவில்லை.

இதோ வருடங்கள் இருபது கடந்தும் அசைவற்று படுத்த படுக்கையில் உணவிற்கு கூட வழியின்றி கிடக்கிறார் ஒரு ஹீரோ.

ஒரு நர்ஸ் பராமரித்து வந்தார்.இப்போது அவரும் இல்லை. சில நடிகர்கள் கொஞ்சம் பணஉதவி செய்தார்கள்..!

படுத்துக் கிடக்கிறார். இதை விதி என்று சொல்வதா..? தானே தேடிக் கொண்ட வினை என்று சொல்வதா..?

சொல்லுங்கள் நண்பர்களே..?

Share This:
Loading...

Related Posts

Loading...