செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரிய நீர்த்தேக்கம்..! சிறிய உயிரினங்கள் வாழ்வதாக நாசா தகவல்!!

Share this post:

sevvaay
செவ்வாய் கிரகத்தில் நீர் இருக்கிறதா? அங்கு ஏதேனும் உயிரினங்கள் வாழ்வதற்கான தடயம் இருக்கிறதா? என்பது பற்றி அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விரிவான ஆய்வுகளை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தற்போது, செவ்வாய் கிரகத்தில் ஒரு மிகப்பெரிய அளவிலான நீர்த்தேக்கம் உறைந்து காணப்படுவதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் உள்ள உதோபியா பிளானிசியா என்ற இடத்தில், நிலத்திற்கு அடியில் சுமார் 80 மீட்டர் ஆழத்திலிருந்து 170 மீட்டர் ஆழம் வரை, இந்த நீர்த்தேக்கம் உறைந்த நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதில் 85% வரையான நீர் பனிக்கட்டியாகவும், இதர நீர் பகுதி பாறை துகள்கள், தூசுக்களில் கலந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலத்தடி நீர்த்தேக்கம், அளவில் அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய ஏரியான சுப்பீரியர் ஏரியைப் போன்று பெரியதாகும்.

இது சுமார் லட்சம் ஆண்டுகளாகக் காணப்படுவதால், அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என்று நாசா கூறுகிறது.

இல்லை என்றால், தற்போது இந்த நிலத்தடி நீர்ப்பகுதியில், சிறிய அளவிலான உயிரினங்கள் வாழ வாய்ப்பு இருப்பதாகவும் நாசா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...