‘அம்மாவின் தாலி’…! அதிர வைத்த ஒரு காதல்..! அடடா படிங்க.. மிஸ் பண்ணாதிங்க..!

Share this post:

ammaa
காளீஸ்வரி, பாலமுருகன் இருவரும் கோவில்பட்டி கல்லூரி ஒன்றில் ஒன்றாகப் படித்தார்கள். பாலுவின் அப்பா விவசாயி. இரண்டு தம்பிகள்.

பாலுவின் அப்பா கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். பாலுவும் பொறுப்பை உணர்ந்து இரவு பகலாக படித்தான். அவனுக்கு எப்படியாவது ஐ ஏ எஸ் பண்ண வேண்டும் என்று ஆசை.

காளீஸ்வரியும் பாலமுருகனும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். மதியம் சாப்பிட ஒன்றும் இல்லாமல் பன் வாங்கி வந்து சாப்பிடுவான் பாலமுருகன்.

இந்த விசயம் ஒரு நாள் தோழி மூலம் காளீஸ்வரிக்கு தெரிய வந்தது. துடித்துப் போனாள். அன்று முதல் பாலுவிற்கும் சேர்த்து மதிய உணவு எடுத்து வந்தாள்.

நான்கு பேர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். சிறு சிறு உதவிகள் செய்து வந்தாள் அந்த நல்ல மாணவி . மூன்றாவது வருடம் மிகவும் கஷ்டப்பட்டான் பாலு கல்லூரி பீஸ் கட்ட பணம் இல்லை.

செமஸ்டர் எழுத முடியாது. அன்று மதியம் அழுது விட்டான். காளீஸ்வரியும் கலங்கிவிட்டாள். அன்று மாலை கோவில்பட்டி பஸ் ஸ்டாண்ட் வாடா என்று கூறினாள். மாலை எழு மணிக்கு போனான் பாலு.

கயிறு கூட பிரிக்காத ஒரு தாலி. அவனிடம் நீட்டினாள் காளீஸ்வரி. திடுக்கிட்டான் . என்ன இது என்றான் ? “என்னோட அம்மா தாலிடா.. அவங்க இறந்து நாலுவருசம் ஆச்சு. பூஜை ரூம்ல வச்சிருந்தோம். பூஜை ரூம்ல இருக்கிறதைவிட உன் படிப்புக்கு இது பயன்பட்டால் அதை விட பாக்கியம் எதுவும் இல்லை. நீ இதை அடகு வச்சுக்கோ. முதல்ல காலேஜ் பீஸ் கட்டுடா என்றாள் .

அழுதுவிட்டான். வேணாம் என்று எவ்வளவோ மறுத்தான் பாலு. காட்டாயப் படுத்தி கையில் திணித்தாள். அடுத்த நாள் காலேஜ் பீஸ் கட்டினான்.

அந்த வருடம் நல்ல படியாக அரியர்ஸ் எதுவும் வைக்காமல் பாஸ் பண்ணினான். அதன் பின் காளீஸ்வரி காணவில்லை. வேறு ஊருக்கு மாற்றி போய் விட்டாள் காளீஸ்வரி.

அவள் அம்மாவின் தாலியைக் கூட அவள் திரும்ப வாங்கவில்லை. அதன் பின் சில நல்ல உள்ளங்களின் உதவியால் மேற்படிப்பு மேற்கொண்டான்.

அவன் கனவுப்படி ஐ ஏ எஸ் எழுதினான். கலெக்டர் ஆனான். திருவண்ணாமலை மாவட்டத்தில் பணியில் சேர்ந்தான்.

அன்று அலுவலகம் முடிந்து தனது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தான் பாலு.ஒரு பெண்ணை கடை வீதியில் பார்த்து திடுக்கிட்டான்.

ஆமாம்… காளீஸ்வரி மெலிந்து போன தேகத்தோடு எதோ பொருள் வாங்கிக் கொண்டிருந்தாள். தனது வாகனத்தை நிறுத்த சொல்லி இறங்கி அவள் முன்னாள் போய் நின்றான் பாலமுருகன்.

அவளுக்கு பயங்கர அதிர்ச்சி.இருவரும் அழுது விட்டார்கள்..! காபி சாப்பிட்டார்கள். அவளின் முகவரியை வாங்கிக் கொண்டான்.

இரண்டே நாட்களில் தனது அப்பா, அம்மா ஆகியோருடன் காளீஸ்வரி வீட்டில் போய் இறங்கினான் பாலு.

ஆச்சரியமாக வரவேற்றாள் காளீஸ்வரி. அப்பாவும் வரவேற்றார். காளீஸ்வரி அன்று கொடுத்த அவள் அம்மாவின் தாலியை அவளுக்கு கொடுத்தான்.

நான் உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும் என்றான். திகைத்து அழுது விட்டாள் காளீஸ்வரி. அவள் அப்பாவிற்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

மகளைப் பார்த்தார். அவள் பேசும் நிலையில் இல்லை. மவுனம் சம்மதம் என்று எண்ணி பேசி முடித்தார்கள்.

இப்போது காளீஸ்வரி ஒரு ஐ ஏ எஸ் மனைவி..! ஒரு குழந்தை இருக்கிறது..!! வாழ்த்துங்கள் நண்பர்களே..! காலத்தே செய்த உதவி..வேறொரு வகையில் நன்மையாக தானே வந்து வாய்க்கிறது..!!

Share This:
Loading...

Related Posts

Loading...