ஒரு மூத்த நடிகர் படுத்தியபாடு சினிமாவே வேண்டாம் என்று சொல்லி ஓடிப்போன வாரிசு நடிகை..!

Share this post:

nu

எண்பதுகளில் பெரிய படங்களின் ஹீரோயின் அவர். சிவகுமார் ரஜினி கமல் விஜயன் சுதாகர் போன்ற நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்தவர்.

அவர் நடித்த பல படங்கள் சில்வர் ஜூப்ளி ஓடியவை. எந்த வம்பு தும்புகளுக்கும் போகாதவர். பீல்டில் இருந்து விலகி அவரது சொந்த மாநிலம் சென்று திருமணம் முடித்து செட்டில் ஆனார். அழகான இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.

அவர்களை வளர்ப்பதில் பிசி ஆனார் அந்த நல்ல நடிகை. பெண்கள் வளர்ந்தனர். மூத்த பெண் அப்படியே அம்மாவின் சாயலில் அழகு மிளிர இருந்தார்.

அவருக்கும் தமிழ் பட வாய்ப்புகள் தேடி வர, நல்ல கதையாக தேர்ந்தெடுத்தார் அம்மா. ஆனால் ஆரம்பம் தொட்டே சினிமாவில் நடிப்பதை அந்த அழகு மகள் விரும்பவே இல்லை என்கிறார்கள்.

ஆனால், தொடர்ந்து வற்புறுத்தவே மகள் சம்மதம் சொன்னார். அம்மாவும் மகளுடன் பாதுகாப்பாய் சூட்டிங் வந்தார். இரண்டு மூன்று நல்ல படங்களில் நடித்தார்.

சில தொந்தரவுகள் வந்தாலும் அம்மா கவசம் போல மகளைப் பாதுகாத்தார். இந்த வேளையில் அந்த முரட்டு, மூத்த நடிகர் படத்தில் இரண்டாம் நாயகி வேடம் வந்தது.

அந்த படத்தை இயக்கிய வரும் பெரிய இயக்குனர். சூட்டிங் துவங்கிய போதே அந்த அழகுப் பெண்ணுக்கு டார்ச்சர் ஆரம்பித்தது என்கிறார்கள்.

நடிகை எவ்வளவோ சமாளிக்க, கொஞ்சம் மிரட்டலாகவே அழைப்பு போனது என்கிறார்கள்.

என்ன செய்வது என்றே தெரியவில்லை. மகளும் மிரண்டு போனார். ஏதேதோ சொல்லி நாட்களை கடத்தி வந்தார்கள். ஆனாலும் வற்புறுத்தல் தொடர்ந்ததாம்.

மகள் கலங்கி அழுதுவிட்டார். எனக்கு சினிமாவே வேண்டாம்மா என்று கதறி அழுதிருக்கிறார் மகள்.

அம்மாவும் கலங்கிப் போனார். முரட்டு ஹீரோவிடம் என்மகள் நல்ல எலும்பு அல்ல கடித்து துப்புவதற்கு. அவள்சிறு பெண் தயவுகூர்ந்து விட்டுவிடுங்கள் நாங்கள் போய்விடுகிறோம் என்று கெஞ்சி சூட்டிங் முடித்துள்ளார்.

டப்பிங் கூட பேச வில்லை. தப்பித்து ஓடிவிட்டார்கள். அதன் பின் அந்த நல்ல பெண்ணுக்கு விரைவாய் மாப்பிளை பார்த்து திருமணம் முடிந்து அமெரிக்கா போய் செட்டில் ஆகி விட்டார் மகள்.

அம்மா இப்போது தனது சொந்த மாநிலத்தில் நிம்மதியாக இருக்கிறார்..! என்ன கொடுமை சார் இது..!

Share This:
Loading...

Related Posts

Loading...