பல திருமணங்கள் செய்த அந்த நடிகை..! டிவி ஷோவில் ஒருவர் கேட்ட கேள்வி….! அதன் பின்..??

Share this post:

nadi0

1970 களில் அறிமுகானவர் லட்சுமிகரமான நடிகை. அன்றைய பெரிய ஹீரோவின் படத்தில் நடித்த போது ஜெயலலிதா இடத்தை நிரப்ப வந்தவர் என்று கொண்டாடினார்கள்.

அழகு ததும்பும் முகமும், கொடி இடையுமாக இவர் நடித்த படங்கள் பெரும் வெற்றி பெற்றன..! பாலிவுட் பட வாய்ப்புகளும் இவரைத் தேடி வந்தன.

அங்கும் போய் முத்திரை பதித்தார்.மிக தைரியமான பெண் இவர். யாருக்கும் எதற்கும் பயப்படவே மாட்டார்.

பல ஹீரோயின்களின் நல்ல ஆலோசனைகள் வழங்கும் தோழியாகவும் இவர் இருந்தார். புகழின் உச்சியில் இருக்கும் போதே ஒருவரை காதல் திருமணம் செய்தார்..!

நடிகை லட்சுமி 1969 இல் பாஸ்கர் என்பதை திருமணம் செய்தார். பின் அவரை விவாகரத்து செய்தார். நடிகர் மோகன் சர்மாவை 1975 இல் திருமணம் செய்து, 1980 இல் விவாகரத்து செய்துவிட்டார்.

பிறகு நடிகரும், இயக்குநருமான கே.எஸ். சிவசந்திரனை காதலித்து 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இப்படி தைரிய லட்சுமியாக வலம் வந்த அற்புத நடிகை இவர்.

பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சியில் நிஜமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அந்த நிகழ்ச்சியில் பல குடும்ப பிரச்சனைகள் பஞ்சாயத்துக்கு வந்தன.

அதில் தைரியமாக தனது தீர்ப்புகளை கூறி அசத்தினார். அந்த நிகழ்ச்சி பெரிய பரபரப்புடன் வெற்றி பெற்றது. நேரலை வேறு. ஒரு நாள் நடிகை நிஜ நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குடும்ப பஞ்சாயத்து வந்தது. அதில் பாதிக்கப் பட்ட ஒரு அபலைப் பெண்ணிற்காக வாதாடினார்.

அந்தப் பெண்ணின் கணவருக்கு போன் போட்டு வறுத்தெடுத்தார் நடிகை. அவ்வளவுதான் அந்த கணவன் பொங்கி விட்டான்.

நேரலை என்று கூட பாராமல் கெட்ட வார்த்தைகளால் நடிகையின் அந்தரங்க வாழ்க்கை பற்றி மிகவும் தப்பாகப் பேசி விட ,கலங்கிப் போனார் நடிகை. நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப் பட்டது என்கிறார்கள்.

உடனே வெளியேறி விட்டார். சொந்த வாழ்க்கையிலும் நிறையப் பிரச்னை. இப்போது தானுண்டு தன வாழ்க்கை உண்டு என்று அமைதியாக ஒதுங்கி விட்டார்..!

Share This:
Loading...

Related Posts

Loading...