இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் செய்யும் முறையற்ற செயல் அம்பலம்!

Share this post:

ss

இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு கேரள கஞ்சா விற்பனை செய்யும் இரகசிய வர்த்தகம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

3000 மில்லி கிராம் கேரள கஞ்சாவை கையில் வைத்திருந்த நிலையில் திருமணமாகாத 25 வயதுடைய அவுஸ்திரேலிய நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த அவுஸ்திரேலிய நாட்டு பெண் இந்த கேரள கஞ்சாவை கட்டுநாயக்கவுக்கு அருகில் உள்ள பிரதேசத்தில் பெற்றுக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நீண்ட காலமாக தொடர்ந்து இலங்கை வரும் இந்த வெளிநாட்டு பெண் அவுஸ்திரேலியாவில் மருந்து சம்பந்தப்பட்ட துறையில் செயற்படுபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் இன்று நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த வர்த்தகத்துடன் தொட்புடையவர்களை முழுமையாக கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...