விக்னேஸ்வரனும் மைத்திரியும் சந்தித்தனர்!.

Share this post:

cm

வடக்கு மாகாணத்துக்கான நிதிகள் தொடர்பில் வடக்கின் முதலமைச்சர் சி விவிக்னேஸ்வரன் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடியுள்ளார்.

இதன்போது ஜனாதிபதியின் தரப்பில் இருந்து சாதகமான பதில் தமக்கு கிடைத்ததாகவிக்னேஸ்வரன் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை இந்த சந்திப்பின்போது வடக்கின் தற்போதைய நிலைமைகள் உட்பட்ட பல்வேறுவிடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சந்திப்பு தொடர்பாக சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதியுடனான சந்திப்பில் 9 மாகாணங்களிலும் உள்ள முதலமைச்சர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

குறித்த சந்திப்பின் போது வட மாகாணத்தின் நிதி பற்றாக்குறை தொடர்பில் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன்.

இது தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி இம்மாத இறுதிக்குள் குறித்த விடயத்துக்கான தீர்வை பெற்றுத்தருவதாக கூறியுள்ளார். இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...