புலிகளுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு ரணில் கற்பிக்கும் பாடம் -அடுத்தது கருணா !!!

Share this post:

karu
கருணா தரப்பிற்கு துப்பாக்கி வழங்கி ரவி ராஜை கொலை செய்த முறை தொடர்பில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அது தொடர்பிலான பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்திற்காக அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறியுள்ள நபர் கடந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சாரதியாக செயற்பட்டுள்ளார்.

ரவிராஜ் கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் கொலை செய்த நபரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அந்த இடத்தில் இருந்து தப்பி சென்றவர் என தெரியவந்துள்ளது. எப்படியிருப்பினும் அவர் தற்போது அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 6 பேரில் மூவர் கடற்படை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் எனவும், இருவர் கருணா தரப்பு உறுப்பினர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நடராஜ் ரவிராஜை கொலை செயற்வதற்கு பயன்படுத்தி துப்பாக்கி இராணுவத்திற்கு சொந்தமானதெனவும், அந்த துப்பாக்கி கிரிதலை இராணுவ முகாமில் வைத்து வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த முகாமில் கருணா தரப்பினர் 150 துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளதாக இதன் போது மேலும் தெரியவந்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...