பலாத்காரம் செய்ய கூலி! பெண்களின் பெற்றோர் சம்மதத்துடன்… 104 பெண்களை கெடுத்த பேய் ஓட்டுநர் !

Share this post:

pey
மாளாவி என்ற ஆப்ரிக்க நாட்டில் பெண்களுக்கு பேய் ஓட்டுபவரை?! “ஹைனா” என அழைக்கின்றனர். அவரிடம் தங்களின் வயதுக்கு வந்த பிள்ளைகளை பெற்றோரே ஒரு இரவுக்கு அனுப்பி விடுவர். மாதவிடாய் முதல்முறையாக வந்த பிறகு இந்த சடங்கு நடைபெறும். இதனை நடத்தும் ஹைனா பெண்களுடன் ஒரு நாள் இரவு முழுவதும் இன்பம் அனுபவிப்பார்.

அப்போது சில பூஜைகளையும் செய்வார். பின்னர் காலையில் அனுப்பி விடுவார். இப்படி செய்தால் பிற்காலத்தில் அந்த பெண்ணிற்கு தீய ஆவிகள் தீங்கு தராது என்பது நம்பிக்கை. இப்படி ஒரு ஹைனா தான் எரிக் அன்னிவா. இவர் பூஜை என்ற பெயரில் 104 பெண்களை பலாத்காரம் செய்துள்ளார். இவராக விரும்பிப் போய் இதனை செய்வதில்லை.

பெற்றோர்களே தங்களது பெண் பிள்ளைகளை இவரிடம் அனுப்பி வைப்பதோடு, பலாத்காரம் செய்வதற்கு அவருக்கு சம்பளமும் கொடுக்கின்றனர். இதற்காக இவர் வாங்கும் தொகை 4 அமெரிக்க டாலர் முதல் 7 டாலர் வரை. பல பெண்களுடன் உடலுறவு கொண்டதால் இவருக்கு எய்ட்ஸ் நோயும் வந்து விட்டது.

இந்த உண்மைகள் அனைத்தும் பிபிசி எடுத்த ஆவணப் படம் மூலம் வெளி உலகிற்கு வந்து ஒரே நாளில் உலகம் முழுவதும் பிரபலம் ஆனார் எரிக் அன்னிவா. இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து அந்நாட்டு அதிபர் பீட்டர் முத்தாரிக்கா இவரை கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து எரிக் அன்னிவா கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...