பழகிய பெண்ணை படுக்கைக்கு அழைத்தான்…!! மறுப்பு சொன்னதால் நயவஞ்சகமாய் பழிவாங்கினான்…!!

Share this post:

palaki
கர்நாடக மாநிலம் மங்களூரு மாவட்டம் பெல்தங்கடி தாலுகா அத்தியடுக்காப பகுதியை சேந்தவர் மகேஷ்.

இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவர் பெல்தங்கடி அருகே நெல்லியாடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில படித்தபோது அவருடன் படித்த அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இருவரும் நட்பாக பழகி வந்தனர். மேலும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும், செல்போனிலும் பேசி தங்களது நட்பை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த மகேஷ். அந்த இளம்பெண்ணை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது மகேஷ் அந்த இளம்பெண்ணிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் பின்னர் மகேசுடன் பேசுவதையே நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ் அந்த இளம்பெண்ணின் படத்தை ஆபாசமாக சித்தரித்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இது குறித்து தர்மஸ்தலா போலீசில் புகார் அளித்தார்.
இதனை அடுத்து போலீசார் மகேசை கைது செய்தனர்.

அதோடு அந்த இளம்பெண்ணின் ஆபாச படமும் நீக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...