“ஏழைகளை கேவலப்படுத்தும் நிகழ்ச்சி!” போதையில் பஞ்சாயத்து! பாய்கிறது நடவடிக்கை!!

Share this post:

sol
சொல்வதெல்லாம் உண்மை என்ற பெயரில் ஜி தொலைக்காட்சியில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தும் நிகழ்ச்சி ஒரு மோசமான முன் உதாரணமாக பார்க்கப்படுகிறது. குடும்ப பிரச்சனைகளை சந்தி சிரிக்க வைப்பார். இதே போன்ற ஒரு நிகழ்ச்சியை மலையாள சேனலான கைரலியில் நடத்தி வருபவர் நடிகை ஊர்வசி.

இவர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஒரு படி மேல். ஊர்வசி முழு போதையில் தான் நிகழ்ச்சிக்கு வருகிறார். நிகழ்ச்சியில் இவர் உளறுவதும், அங்கு வரும் விருந்தினர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதும், போதையில் தள்ளாடுவதும் எல்லோரும் அறிந்த விஷயம்.

இந்நிலையில் இந்த விவகாரம் கேரளாவில் தற்போது விஷ்வரூபம் எடுத்துள்ளது. ஊர்வசி மீது ஏற்கனவே தனியார் பெண்கள் அமைப்புகள் புகார் கொடுத்த நிலையில் கேரள மாநில மனித உரிமைகள் ஆணையம் விளக்கம் கேட்டு கைரலி செய்தி சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதே போல் கேரள மாநில சட்ட ஆணையத்திற்கும் கடிதம் எழுதியுள்ளது. ஊர்வசியின் இந்த நிகழ்ச்சி இந்திய நீதி அமைப்பை கேலி கூத்தாக்குவதாக Royal Kawdiar Protection Forum என்ற பொது நல அமைப்பின் தலைவர் Shefin என்பவர் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு வருபவர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியவர்கள் என்றும் அவர்களது சுய மரியாதையை கெடுக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...