ஒப்பற்ற நடிகன்..! ஆனால் நிஜ வாழ்விலும் வில்லனாய்..!? அந்த ஒரு இரவில்…!?

Share this post:

 

raguvaran_liveday_z18ozf
வாழ்க்கை எப்போது எங்கிருந்து ஆரம்பிக்கும் எங்கு முடிவடையும் என்பது தெரியாது.ஆனால் வாழ்க்கையில் வெற்றி என்பது முழுக்க தங்கள் சொந்த முயற்சிகள்.

கடுமையான உழைப்பு, அசாத்திய திறமை இவைகள் மூலமாகவே கிடைகிறது. அப்படி கிடைத்த வெற்றியை தக்கவைத்துக் கொள்வதில் தான் சூட்சுமம் இருக்கிறது.

ரகுவரன் என்கிற மாபெரும் நடிகனும் அப்படித் தான். அசத்தல் நடிப்பால் தமிழ் திரையுலகை ஒரு கலக்கு கலக்கியவர்.

ஆனால் கூடா நட்பும்.. மிக மோசமான போதைப் பழக்கங்களுக்கும் அடிமையாகி அநியாயமாக செத்துப் போனார்..!

1948ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ந் தேதி கோவை மாவட்டத்தில் ரகுவரன் பிறந்தார். அங்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த ரகுவரன் ஏவிஎம் தயாரித்த “மனிதன்’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் திரையுலகில் கால் பதித்தார்.

தொடர்ந்து 1982ம் ஆண்டு “ஏழாவது மனிதன்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார். அடுத்த ஆண்டில் ருக்மா, ஒரு ஓடை நதியாகிறது போன்ற படங்களில் நடித்த ரகுவரன், எழுத்தாளர் சிவங்கரி எழுதிய ஒரு மனிதனின் கதை என்ற நாவல் திரைப்படமாக்கப்பட்டபோது, அதில் கதாநாயகனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

அந்த படத்தில் மதுவுக்கு அடிமை யான ஒரு மனிதனின் வாழ்க்கையை விவரிக்கும் பாத்திரத்தில் நடித்த ரகுவரன் தனது சொந்த வாழ்க்கையிலும் போதைப் பொருளுக்கு அடிமை யானது சோகமான ஒற்றுமையாகும்.

1986ம் ஆண்டு ஏவிஎம் தயாரிப்பில் வெளிவந்த சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மிகச்சிறப்பாக நடித்து திரையுலகில் தனக்கு ஏற்பட்ட தொய்வை சரி செய்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ரகுவரன் இரவு பகலாக நடித்து அசத்தினார்.

தெலுங்கில் வெளிவந்த லங்கேஷ் வரடு என்ற படத்தில் ராவணனாகவும் ரகுவரன் நடித்துள்ளார். 1990ம்ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி படத்தில் மிகச்சிறப்பாக ரகுவரன் நடித்திருந்தார்.

அதே ஆண்டு ரஜினியுடன் சிவா என்ற படத்தில் முதல் முறையாக இணைந்து நடித்தார். ரஜினிக்கு மிகவும் ராசியான நடிகர் ரகுவரன்..!

இருவரும் சேர்ந்து நடித்த படங்கள் அத்தனையும் மெகா ஹிட். ஆனால் மீண்டும் போதைப் பழக்கம் மதுவோடு கஞ்சா போன்ற பழக்கங்களுக்கும் அடிமையானார்.

ஒரு இரவு தன அன்பு மனைவியிடம் கூட சொல்லாமல் மிக மோசமான அந்த ஏரியாவிற்கு தனியே போய் போதை வஸ்துகள் வாங்கி வந்ததாக கூறி அதிர்ந்தார் அவரின் மனைவி.

சொந்த தம்பிஒருவர் ரகுவரன் கூடவே இருந்து பார்த்துக் கொண்டார். ஆனால் அவராலும் ரகுவரனை கட்டுப் படுத்தவோ திருத்துவதோ இயலாமல் போய் விட்டது.

போதையில் இருக்கும் ரகுவரனை சமாளிப்பது மிகவும் கடினம் என்கிறார்கள். நிஜ வாழகையிலும் பயங்கர வில்லனாகத் தெரிந்தார். முரட்டுக் குணம் வேறு. இதானால் அவரது தம்பி இவரை விட்டு வெளியேறி விட்டார் என்கிறார்கள்.

மாநில அரசின் சிறந்த வில்லன் விருதை இரண்டு முறையும், பிலிம்பேர் விருதை ஒரு முறையும் ரகுவரன் வாங்கியுள்ளார்.

நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரகுவரன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ந் தேதி ரோகிணியிடமிருந்து விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ரிஷி என்ற மகன் உள்ளார்.

விவாகரத்துக்கு பின்னர் பாண்டிபஜாரில் உள்ள தனது வீட்டில் ரகுவரன் தனியாக வசித்து வந்தார். மது மற்றும் போதைப் பழக்கங் களுக்கு அடிமையாகி மீண்ட ரகுவரன் தனது கடைசி காலத்தில் சாய்பாபாவின் தீவிர பக்தராக மாறினார்.

ஆனாலும் அவரால் போதைப் பழக்கத்தில் இருந்து மீளவே முடியவில்லை. மரணம் வரை தொடர்ந்த போதை பழக்கமே அவரின் உயிரையும் காவு வாங்கியது..!

Share This:
Loading...

Related Posts

Loading...