முதலாளி மனைவிக்காக…காதல் மனைவியை….ஓ மை காட்…?!

Share this post:

boos

முதலாளி மனைவிக்காக, அவர் மீது கொண்ட காதலுக்காக, கேவலமான அற்ப சுகத்திற்காக தான் காதலித்து திருமணம் செய்த மனைவியை கொன்றார் ஒருவர்..! கொடுமை…!கொடுமை..!

காதல் மனைவியை கொன்று, வீட்டிலேயே புதைத்த கொடூர கணவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சாரகப்பள்ளியைச் சேர்ந்தவர் அணில்குமார். இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திரிவேணி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார்.

ஆனால் தான் வேலை பார்த்த இடத்தில முதலாளி மனைவிக்கும் அணில் குமாருக்கும் கள்ள உறவு இருந்திருகிறது. பல இரவுகள் அணில் வீட்டிற்கே வருவதில்லையாம்.

முதலாளி வீட்டில் தங்கி விடுவார் என்கிறார்கள்.ஒரு நாள் குடி போதையில் மனைவியிடம் உளறிவிட்டார் அணில்.

அதிலில் இருந்தே இருவருக்கும் சண்டை வந்திருகிறது…! ஒரு நாள் திரிவேணி முதலாளி வீட்டிற்கே சென்று சண்டை போட்டுள்ளார்…!

ஆனாலும் கணவன் திருந்தியபாடில்லை. ஒரு நாள் தனது வீட்டிற்கே முதலாளி மனைவியை வரவைத்துவிட்டார் அணில்.

இதன் காரணமாக சண்டை போட்டுவிட்டு கிளம்பி விட்டார் திரிவேணி. இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். இதனிடையே மனைவி திரிவேணியை சமாதானம் பேசி அழைத்துள்ளார்.

அதன் பின்னர் திரிவேணியிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததால் அவரின் பெற்றோர்கள் பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்ட போது திரிவேணியை கொலை செய்து வீட்டில் புதைத்ததை ஒப்புக்கொண்டார்.

அதனை தொடர்ந்து உடலை தோண்டி எடுத்த போலீசார் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உடலை எரித்தனர்.

பின்னர் கர்நாடக போலீசார் அணில்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...