மலையில் மர்மமான முறையில் பெண் தூக்கிட்டு தற்கொலை!!

Share this post:

t

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சூளகிரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி மலை ஒன்று உள்ளது. இந்த மலையில் உள்ள மரம் ஒன்றில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவலின் பேரில் சூளகிரி போலீசார் அங்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த தற்கொலை சம்பவம் இரவு நேரத்தில் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது கொலையா என வழக்குப்பதிந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...