20 ரூபாய் டாக்டர் மரணம்… ஏழை மக்கள் கதறல்!

Share this post:

20

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவமனைக்கு சென்றாலே சொத்தை இழந்து விடுவோம்.

அந்தளவுக்கு பணம் நம்மிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடும். ‘ரமணா ‘ திரைப்படத்தில் வருவது போல பல மருத்துவமனைகள் நாடு முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. சாதாரண மக்கள், அரசு மருத்துவமனைக்கு சென்றால் கூட பல விஷயங்களுக்குப் பணத்தை அழ வேண்டியது இருக்கிறது.

இதற்கு பயந்து கொண்டே உடலுக்கு ஏதாவது அசவுகர்யம் ஏற்பட்டால் கூட, மருத்துவமனையை நாடாமல் நடமாடிக் கொண்டிருக்கும் உயிர்கள் பல உண்டு.

அப்புறம் பார்த்துக்கலாம்னு… தானா குணமாகுதுனா காத்திருக்கும் மக்களும் நிறையே பேர். ‘மருத்துவர்களை கடவுளுக்கு நிகர் ‘ என்பார்கள். நோயாளி உயிர் பிழைத்தால் டாக்டர்களின் கையை பிடித்துக் கொண்டு ‘நீங்கதான்யா எங்க தெய்வம்’ என்றும் சொல்வார்கள்.

அப்படி மருத்துவத்துறையில் தெய்மாக உலவி வந்த மருத்துவர் ஒருவர் மரணமடைந்து விட, மக்கள் கதறி விட்டனர்.

கோவை ராஜகணபதி நகரைச் சேர்ந்தவர் டாக்டர். பால சுப்பிரமணியம். ஆவாரம்பாளையத்தில் மருத்துவமனை நடத்தி வந்தார். மருத்துவமனை என்றால் என்னவோ பெரிய கட்டிடத்தில் இயங்கும் என்று நினைத்து விடாதீர்கள். பத்துக்கு பத்து அடி அறைதான் அந்த மருத்துவமனை.

தொடக்கத்தில் சிகிச்சையளிக்க இவர் வாங்கிய பீஸ் வெறும் 2 ரூபாய்தான். நாளைடைவில் பணத்தின் மதிப்பு குறைய குறைய தனது பீஸ் தொகையை உயர்த்தினார். அப்படி உயர்த்தி உயர்த்தி 20 ரூபாய்க்கு கொண்டு வந்தார். இதுதான் சிகிச்சை அளிக்க இவர் வாங்கிய அதிக பீஸ்.

நாளைடைவில் இவரது பெயரே மறைந்து போய் 20 ரூபாய் டாக்டர் என்றே நிலைத்து விட்டது. பிரமாண்டமான மருத்துவமனைகள் நிறைந்த கோவை நகரில், 20 ரூபாய்க்கு வைத்தியம் பார்க்கவும் மக்களுக்கு ஒரு டாக்டர் கிடைத்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...