ரயில் தடம்புரண்டு பயங்கர விபத்து..! இதுவரை 20 பேரின் உடல்கள் மீட்பு..! ஏராளமானோர் சிக்கித் தவிப்பு!!

Share this post:

rayil

உத்திரப்பிரதேச மாநிலம், கான்பூர் அருகே புகாரயம் என்ற இடத்தில் பாட்னா இண்டூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு பயங்கர விபத்துக்குள்ளானது.

ரயிலின் 14 பெட்டிகளும் தடம்புரண்டதால் பெட்டிகள் ஒன்றன்பின் ஒன்றாக நசுங்கியது. நசுங்கிய இதில் சிக்கி உயிரிழந்த சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகளின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.

மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாயப்புள்ளதாகவும், ஏராளமானோர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோல், நேற்று அதிகாலை ராஜஸ்தானில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டடோர் காயமானது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...