நான் ஏன் வரிசையில் நிற்கணும்..? அந்த கவர்ச்சி நடிகைக்கு பேங்க் மானேஜர் கொடுத்த சூப்பர் பரிசு..!!

Share this post:

kavar-1

இன்றைய தேதிக்கு யார் பணக்காரர், யார் ஏழை என்பதே தெரியவில்லை. அனைவருமே வங்கி வாசல்களில் கியூவில் நிற்கின்றனர்.

அதே நேரம் சினிமா நடிகர்களோ நடிகைகளோ ஏன் வங்கியில் வரிசையில் நிற்பதில்லை என்கிற ஆதங்கம் பொதுமக்களிடம் நிறையவே இருக்கிறது.

இந்த நேரத்தில் ஒரு சூப்பர் நிகழ்வு ஒன்று நடந்தது என்கிறார்கள் சம்பவத்தை நேரில் பார்த்த கோடம்பாக்கம் வாசிகள்.

அந்த கவர்ச்சிகரமான நடிகை தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற திரைப்படங்களில் ‘அந்த’ மாதிரி படங்களில் நடித்தவர்.

நெல்லையில் நான் ராஜ பரம்பரை என்று கூறிக் கொள்பவர். அடிக்கடி போலீஸ் விசாரணையில் சிக்கும் குடும்பம் அது.

இரு தினங்களுக்கு முன் தனது ஆடி காரில் வங்கிக்கு வந்த அந்த கிளாமர் நடிகை, நீண்ட வரிசையை பொருட் படுத்தாமல் நேராக உள்ளே செல்ல முயற்சித்தார். மக்கள் அவரிடம் வரிசையில் நிற்கும்படி கூறினார்கள்.

அசால்ட்டாக சிரித்த நடிகை, ஒரு போன் பண்ணா பேங்க் மேனேஜரே என்வீட்டு வாசல்ல கியூல நிப்பாரு என்று கூறியபடி நேராக உள்ளே போனார்.

இந்த தகவல் உள்ளே மேனேஜருக்கு போனது..! ஒரு இரண்டு நிமிடங்களில் சுவரில் அடித்த பந்து போல நடிகை வெளியே ஓடி வந்தார்.

பினாலேயே வந்த வங்கி ஊழியர் ஒருவர், ஏய் இந்தா உன்னோட புக்கு ஓடிபோயிடு என்று வங்கிப் புத்தகத்தை தூக்கிப் போட்டார். முகமெல்லாம் கோபம் கொப்பளிக்க அதை எடுத்துக் கொண்டு வேகமாக கார் கதவைத் திறந்து டமால் என்று கதவைச் சாத்திக் கொண்டு காரில் பறந்துவிட்டார்.

பொதுமக்கள் முகத்தில் வந்த சந்தோசமும்..சிரிப்பும் ஆரவாரமும் அடங்க வெகு நேரமானது என்கிறார்கள்..!

சபாஷ்..! அசத்தல் வங்கி ,அசத்தல் மேனேஜர்..!

Share This:
Loading...

Related Posts

Loading...