மாணவர்களின் கொலை வழக்கு பிற்போடல்

Share this post:

sa

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ் உத்தரவினை யாழ். நீதிவான் நீதிமன்றம் இன்று (18) பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்; கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியில் கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இரு பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பிலே குறித்த 5 பொலிஸ் அதிகாரிகள் கைதுசெய்யப்பட்டு அனுராதபுரம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...