எச்சரிக்கை -காலநிலை மோசமடைகிறது -ஆபத்திலிருந்து அனைவரையும் காக்க அதிகமாய் பகிருங்கள் !!

Share this post:

 

kaala

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை காரணமாக இலங்கையில் சீரற்ற காலநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான கனமழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்ய கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக மேற்கு, தெற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று காலை முதல் பனி மூட்டமான காலநிலை ஏற்பட கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பில் இருந்து ஹம்பாந்தோட்டையில், காலி வரையிலான கடல் பகுதிகளில் கொந்தளிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...