500,1000 பிரச்சினையால் பாலியல் தொழிலுக்கு ‘ஆப்பு’..! இது விபச்சாரிகளின் குமுறல்..!!

Share this post:

oll

ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத்தொடர்ந்து நாடுமுழுவதும் பொதுமக்கள் கடந்த சில நாட்களாக பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அத்தியாவசிய செலவுகளுக்கு ரூ.100 நோட்டுகளை பெற வங்கிகளில் நீண்ட வரிசையில் நாள்முழுவதும் காத்துக்கிடக்கின்றனர்.

இந்நிலையில், பாலியல் தொழிலில் கொடிகட்டி பறக்கும் வட மாநிலங்களில் பிரபலமான சிவப்பு விளக்கு பகுதிகளில் பாலியல் தொழில்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதகாக கூறப்படுகிறது. இதற்கு மக்களின் பணத்தேவையும், சில்லரை தட்டுப்பாட்டால் வழக்கமான செலவுகளை தவிர்த்து வருகின்றனர். இதனால்தான் விலைமாதர்கள் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரெட்லைட் ஏரியா பாலியல் தொழிலாளர்கள் கூறுகையில், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் இங்கு வாடிக்கையாளர்கள் வருகை குறைந்துவிட்டதாகவும், பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுப்பதால், வரும் ஒரு சில வாடிக்கையாளர்கள் கூட சென்றுவிடுகின்றனர். இதனால் எங்கள் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எங்களின் அத்தியவாசிய செலவுகளை குறைத்தும் பெரும் அவதிப்பட்டு வருகிறோம் என்று அவர்கள் குமுறலுடன் தெரிவித்தனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...