பெங்களூரில் ரஸ்டம் 2 ஆளில்லா விமானம் பரிசோதனை: வெற்றிகரமாக விண்ணில் பறந்தது!!

Share this post:

 

rastam_2_liveday_lqezqv

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் தான் ரஸ்டம் 2 என்ற உளவு விமானம். நீண்ட தூரம் சென்று அதிக சக்தி வாய்ந்து தாக்கும் திறன் கொண்ட இந்த விமானம், நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும்.

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால், ரஸ்டம் 2 என்ற குண்டு வீசும் ஆளில்லா விமானம் வெற்றிகரமாக நேற்று பெங்களூரில் பரிசோதிக்கப்பட்டது.

பெங்களூர் நகரில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்ரதுர்கா விமான சோதனை மையத்தில் இந்த சோதனை செய்யப்பட்டது.

இந்த விமானமானது 24 மணி நேரம் நீடித்து உழைக்கும் ஆற்றல் கொண்டது. நம்முடைய இராணுவப் படையில் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக இதனை பயன்படுத்த முடியும்.

TAPAS 201 என்று அழைக்கப்படும் இந்த விமானம் பெங்களூருவில் உள்ள வானூர்தி மேம்பாட்டு அமைப்பு, பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Share This:
Loading...

Related Posts

Loading...