யாழில் தொடரும் கைதுகள் -யாருக்கும் எதுவும் புரியவில்லை !!

Share this post:

kaithu
கொழும்பிலிருந்து சென்ற பயங்கரவாத தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் யாழில் தொடரும் கைது நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது.

இது தொடர்பில் இதுவரை 11 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில் அண்மைக் காலமாக தொடர்ந்து இடம்பெற்ற அசம்பாவிதங்களை தொடர்ந்து, பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் யாழில் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேடுதல் நடவடிக்கைகளின் போது, வடக்கில் சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் ஆறு பேர் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டுவரும் மாவீரர் வாரத்தை இம்முறை யாழிலும் அனுஷ்டிக்க எதிர்ப்பார்த்துள்ள நிலையில் அதனை குழப்பும் வகையில் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...