தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் துட்டகைமுனுவிற்கும் என்ன தொடர்பு?ரணில் சொல்லுக்குறார் !!

Share this post:

74726

அங்கவீனமடைந்த இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மிகப்பெரிய குற்றம் அதற்கு பதில் கூறவேண்டியது நல்லாட்சி என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

வரவு செலவு திட்ட விவாதத்திற்காக இன்று பாராளுமன்றம் ஒன்று கூடியது. அங்கு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் ஒரு நாட்டில் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் மீது முறைகேடான வகையில் நீர்த்தாரையும் கண்ணீர் புகையும் பிரயோகிக்கப்பட்டது அது கண்டிக்கப்படத்தக்கதாகும்.

பிக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, கூட்டு எதிர்க்கட்சி இதனை வன்மையாக கண்டிக்கின்றது, பிரதமர் இதற்கு என்ன பதிலை அளிக்கப்போகின்றீர்கள்? என்ற கேள்வினையும் தினேஸ் முன்வைத்தார்.
குறித்த கேள்விக்கு பிரதமர் பதில் அளிக்கும் போது,

அங்கவீனமடைந்த இராணுவத்தினர் மீது குறிவைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட வில்லை. முறைகேடான வகையில் நடந்து கொண்டவர்கள் மீதே நீர்த்தாரையும் கண்ணீர் புகையும் பிரயோகிக்கப்பட்டது.

அங்கவீனமடைந்தவர்களை காரணம் காட்டி பிக்குகளும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்தார்கள். அதனைப் பார்க்கும் போது தேரர்களும் அங்கவீனமடைந்தவர்களா என எண்ணத்தோன்றுகின்றது.
யாராக இருந்தாலும் அத்துமீறிய செயலை செய்யும் போது அவர்களை களைப்பதற்கு செய்ய வேண்டியதே செய்யப்பட்டது.

இப்போது இராணுவத்தினரை காக்க முன்வந்துள்ள பிக்குகள் சரத்பொன்சேகா கைது செய்யப்பட்ட போது கேள்வி எழுப்பவில்லை.

எம்மிடம் பக்க சார்பு இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் அளித்தார்.
பிரதமரின் பதிலை எதிர்ப்பார்த்து காத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆவேசமாக எழுந்து பிரதமரிடம் பதில் கேள்வி எழுப்பினார்.

அதாவது, தேரர்களுக்கு அவதூறான வகையில் பேச வேண்டாம், வரலாற்றில் துட்டகைமுனு காலத்தில் இருந்து தேரர்கள் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளனர் அதனை தற்போது மாற்றி வருகின்றீர்கள்.
தேரர்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

அங்கவீனமடைந்த இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குற்றமே அதனை பிரதமர் ஒத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினையும் விமல் முன்வைத்தார்.

விமலின் கேள்விக்கு பிரதமர் பதில் அளிக்கும் போது,

துட்டகைமுனு ஒன்றும் பிரபாகரனுடன் சென்று ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். அதே போன்று துட்டகைமுனு ஆட்சி செய்த போது இவ்வாறு நடக்கவில்லை.

அடுத்தது தலதா மாளிகையின் முன்னிலையிலேயே தேரர்கள் மல்வத்து பீடத்தை இரண்டாக பிளவு செய்வதாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தனர் அதனை மறந்து விடவேண்டாம்.

எவ்வகையிலும் முறைகேடான வகையில் நடந்து கொண்டதாலேயே நீர்த்தாரையும் கண்ணீர் புகையும் பிரயோகிக்கப்பட்டது என பிரதமர் பதில் அளித்தமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...