விமலின் மகள் எடுத்த அதிரடி முடிவு…!

Share this post:

vimal

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவின் மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தனக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் செய்தி வெளியானமை தொடர்பில் அதிரடியாக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் ஹோகந்தர பிரதேசத்திலுள்ள விமல் வீரவங்சவின் வீட்டில் தங்கியிருந்த24 வயதான லஹிரு ஜனித் என்ற இளைஞன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இவரது மரணம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகி இருந்தன.

விமல் வீரவங்சவின் மகளுக்கும் உயிரிழந்த இளைஞனுக்கும் காதல் தொடர்பு இருந்ததாகவும், அதனை ஏற்றுக்கொள்ளாத வீரவங்ச குடும்பத்தினர் திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் விமல் வீரவங்சவின் மகள், சிறுவர் அதிகார சபையில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...