கணவருடன் சண்டை ஏற்பட்டதன் காரணமாக 3 வயது மகனுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்….!! – குறித்த சம்பவம் எங்கு நடந்தது என்று தெரியுமா…? [photos]

Share this post:

vauneja03
கணவனுடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால் தனது மூன்று வயது மகனுடன் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட துயர சம்பவம் வவுனியா – ஓமந்தை புதிய வேலன் சின்னக்குளம் பகுதியில் நடைப்பெற்றுள்ளது.

இவர்களின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

கணவன் மனைவிற்குள் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக வீட்டிலிருந்து தனது 3 வயது மகனுடன் தவனை பணம் செலுத்த செல்வதாக கூறி வெளியேறிய குடும்ப பெண்ணே இவ்வாறு பரிதாபகரமான முறையில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

நேற்று மாலை வரை வீடு திரும்பாததை அடுத்து கணவன் இன்று காலை அயலிலுள்ள கிணற்றுக்குள் சென்று பார்த்த போது தாய் மற்றும் மூன்று வயது மகன் இருவரும் சடலமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.vauneja01

vauneja03

vauneja03

Share This:
Loading...

Recent Posts

Loading...