மனைவியின் தங்கை மீது இருந்த காதலால் மனைவியை கொலை செய்த காதலன் …!

Share this post:

sfdsa

இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு அருகேயுள்ள புலவன்விளையைச் சேர்ந்தவர் டேவிட் சாமுவேல்(வயது31). வெளிநாட்டில் ப்ளம்பராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் எப்சிபாய் என்பவருக்கும் 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஊர் திரும்பினார். எப்சிபாய்க்கு ஒரு தம்பியும், தங்கையும் உள்ளனர். இவர்களின் தந்தை சில வருடங்களுக்கு முன்பும், தாய் சில மாதங்களுக்கு முன்பும் காலமானார்கள். இதனால் தம்பியையும், தங்கையையும் தன்னுடைய வீட்டில் எப்சிபாய் தங்கவைத்தார்.

எப்சிபாயின் தங்கை ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்தார். இவரை டேவிட் சாமுவேல்தான் கொண்டு போய் விடுவார். இந் நிலையில் கொழுந்தியாள் மீது அவருக்கு ஆசை ஏற்பட்டது. அவரை திருமணம் செய்ய விரும்பினார்.

ஆனால் திருமணத்திற்கு மனைவி எதிர்ப்பு தெரிவிப்பார் என்று நினைத்த சாமுவேல், மனைவி மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று கூறினார். ஆனால் அவரது நடவடிகையில் சந்தேகம்டைந்த உறவினர்கள் பொலிசில் புகார் செய்தனர்.

பிரேத பரிசோதனையில் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வர, பொலிசார் தீவிர விசாரணை செய்ததில், கொழுந்தியாள் மீதுள்ள காதலால் மனைவியை கொலை செய்ததாக சாமுவேல் வாக்குமூலம் கொடுத்துள்ளர். பின்னர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...