ஆட்டுக்கறியின் பின்னணியில் பூனைக் கறி மோசடி! அவதானம்….

Share this post:

sxdas

சென்னையில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் சாலையோர உணவு கடைகளில் ஆட்டிறைச்சி என்ற பெயரில் பூனைக்கறி விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது விலங்கின ஆர்வலர்கள் மத்தியில் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல இடங்களில் காளான் போல உணவகங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

அதற்கேற்ப உணவகங்களில் உணவுக்காக பயன்படுத்தப்படும் இறைச்சியில் கலப்படம் அதிக அளவில் நடந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மட்டன் போன்ற இறைச்சியின் விலை அதிகமாக இருப்பதால் பூனை, எலி போன்ற விலங்கின் இறைச்சியை குறைந்த விலைக்கு வாங்கி உணவுக்காக பயன்படுத்தப்படும் மட்டன் போன்ற உணவுகளில் கலப்பது தற்போது தெரியவந்துள்ளது.

சென்னையில் பூந்தமல்லி, பல்லாவரம், கோட்டூர்புரம் போன்ற பகுதிகளில் நரிக்குறவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். தாங்கள் எலி பிடிப்பதற்காக வைக்கும் கூண்டுகளில், பூனைகள் மற்றும் உடும்பு போன்ற விலங்குகள் அதிகளவில் சிக்குவதாக கூறுகின்றனர்.

இவ்வாறு சிக்கும் பூனை, உடும்பு போன்றவற்றை தனியாக பிடித்து அதன் கறி மற்றும் ரத்தம் என விற்பனை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் இவை 200 முதல் 1000 ரூபாய் வரை விற்கப்பட்டு வருவது வெளிச்சத்திற்கு வந்தது.

கூண்டுகளில் சிக்கும் பூனையை பிடித்து வெந்நீரில் வேக வைத்து அதனை வெட்டி இறைச்சியாக்கி உணவகங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், 1 கிலோ பூனை கறி 110 ரூபாய்க்கு (இந்திய ரூபா) உணவு விடுதிகளுக்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனை அறிந்த விலங்கு நல ஆர்வலர்கள் பல்லாவரத்தில் சோதனை செய்து 15 பூனைகள் மீட்டுள்ளனர்.

பூனை கறியை மனிதன் சாப்பிடும் போது வழக்கமாக உட்கொள்ளப்படும் இறைச்சி போலவே நம்முடைய வயிறு எடுத்துக் கொள்ளும், ஆனால் அந்த விலங்குகளுக்கு நோய் பாதிப்புகள் இருக்கும் பட்சத்தில் குடல் சார்ந்த பிரச்னைகள், வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியவை ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

Share This:
Loading...

Related Posts

Loading...