இது என்ன புதுக்கூத்து.. கமல்-கவுதமி பிரிவுக்கு பின்னணியில் இருப்பது அந்த நடிகையா?

Share this post:

kama

ஒன்றாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்த கமல் ஹாசன், கவுதமி இடையேயான 13 வருட பந்தம் இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் பிரிய கமலுக்கு உதயமான, புதிய காதல் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கமல்ஹாசனையும், அவரது காதல் வாழ்க்கையையும் பிரிக்கவே முடியாது. ஸ்ரீவித்யாவுடன் இணைத்து பேசியதில் ஆரம்பித்து, சிம்ரன், கவுதமி என வந்து நிற்கிறது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.

இதில் கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால், ஒவ்வொரு முறை அவர் தனது காதலி/மனைவிகளை பிரியும்போதெல்லாம், அதற்கு காரணமாக இருந்தது இன்னொரு, காதல்தான்.

காதல் பூக்கள்
புதுக்காதல் பூக்கும்போதெல்லாம், பழைய காதல் உதிருவது கமல் வாழ்க்கை நெடுகிலும் காணக்கிடக்கும் சங்கதி. காதல் எப்போதுமே பொசசிவ்னெஸ் கொண்டது. அதிலும் பெண்கள் தங்களவர்களை விட்டுத்தராத குணம் அதிகம் கொண்டவர்கள். எனவேதான், புதுக்காதல் மலரும்போதெல்லாம் பழைய காதலிகள் நகர்ந்து செல்வது வழக்கம்.

லாஜிக் இருக்குதே
சரிகாவுடன் காதல் மலர்ந்ததால்தான், வாணி கணபதியை விவாகரத்து செய்தார், சிம்ரனுடன் கிசுகிசுக்கப்பட்டதால்தான் கமலுடனான 14 வருட திருமண வாழ்க்கையை விட்டு விலகினார் சரிகா. அப்படியானால், இப்போது கவுதமியை விட்டு கமல் விலகவும் மற்றொரு காதல்தானே காரணமாக இருக்க முடியும் என்று லாஜிக் பேசுகிறார்கள் கோலிவுட் தலைகள்.

அடுத்தடுத்து சான்ஸ்
கமல் கடும் நெருக்கடிகளுக்கு நடுவே விஸ்வரூபம் எடுத்த திரைப்படத்தில் நடித்த, நடிகை ஒருவருடன் கிசுகிசு உலவியதை கோலிவுட் வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதன்பிறகு கமல் நடித்த இன்னொரு படத்திலும் இந்த நடிகை இடம் பிடித்தார். இப்போது மற்றொரு படத்திலும், கமலுடன் அவர் நடித்து வருகிறார். இத்தனை படங்களில் கமலோடு நடிக்க காரணம் இல்லாமல் இருக்குமா..? என தலையை சொறிகின்றன அந்த வட்டாரங்கள்.

மூத்த நடிகை
இதுதவிர புண்ணியத்தலம் ஒன்றின் பெயருடன் வெளியான திரைப்படத்தில் நடித்த சற்று வயது மூத்த நடிகையுடனும் கமல் கிசுகிசுக்கப்படுகிறார். இரண்டில் ஒன்று நிச்சயம் என பெட் கட்டுகிறார்கள் கோலிவுட் வட்டாரங்கள். அப்படியெல்லாம் இல்லை, கமல் பாதை இனி வேறு என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான தரப்பில். பொறுத்திருந்து பார்ப்போம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...