கௌரி காப்பு எடுத்துவிட்டு காதலனுடன் ஓடித் தப்பிய பெண்!! – நடந்தது என்ன..?

Share this post:

mnada

கௌரி காப்பு எடுத்துவி்ட்டு காதலனுடன் ஓடித் தப்பிய யுவதியால் யாழில் பரபரப்பு!! யாழ் நல்லுார்ப் பகுதியில் உள்ள கோவில் ஒன்றுக்கு தாயாருடன் கௌரி விரதத்துக்கு வந்த 19 வயது யுவதி தாயாரை கோவிலில் விட்டுவிட்டு காதலனுடன் ஓடித்தப்பிய சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதி இளைஞன் ஒருவனைக் காதலித்து வந்ததாகவும் இதனை அறிந்த பெற்றோர் குறித்த யுவதியை வீட்டை விட்டு வெளியேறாது சிறிது காலம் தடுத்து வைத்திருந்துள்ளனர்.

அவ்வாறு யுவதி வெளியே செல்வதாக இருந்தாலும் தந்தை அல்லது தமையனுடனேயேய அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந் நிலையில் நேற்று நண்பகல் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு யுவதியும் தாயாரும் கௌரிக் காப்பு கட்டுவதற்காக யுவதியின் தந்தையின் காரில் வந்துள்ளனர்.

தந்தை இருவரையும் இறக்கிவிட்டு சென்ற பின்னர் கோவிலுக்குள் கௌரிக் காப்பு கட்டி விட்டு யுவதி அங்கிருந்து மாயமானார். இதனால் கோவிலில் தாயார் கத்திக் குளறியுள்ளார். அப்போது குறித்த யுவதி இளைஞன் ஒருவனுடன் மோட்டார் சைக்கிளில் ஏறிச் செல்வதாக அங்கிருந்த பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தாயார் கத்திக் குளறி தனது கணவனிடம் தொலைபேசியில் தகவலைக் கூறியுள்ளார்.

சிறிது நேரத்தில் அங்கு இளைஞர்கள் பலர் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிள் படையணியுடன் தந்தை வந்து சேர்ந்து அப்பகுதி எங்கும் ஓடித்திரிந்ததாக கோவில் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை குறித்த யுவதியின் தொலைபேசி பறிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு கோவிலுக்கு யுவதி வருவதை காதலன் அறிந்தான் என்பது பெரும் மர்மமாகவே உள்ளதாக யுவதிக்கு நெருங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...