சாரதிகளுக்கு எச்சரிக்கை – போக்குவரத்து விதிமுறை மீறப்பட்டால் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும்..!

Share this post:

 

போக்குவரத்து விதிகளை மீறி சாரதிகள் செயற்பட்டால் போக்குவரத்து வழி அனுமதிப்பத்திரங்கள் ரத்த செய்யப்படும் என வடமாகாண போக்குவரத்து அமைச்சர் ப.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் பேரூந்து சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து உரிமையாளர்களிற்கு போக்குவரத்து வழி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்று காலை 10 மணியளிவ்ல குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. அமைச்சர் டெனிஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர், கரைச்சி பிரதேச செயலாளர், பொலிஸார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது 120 பேரூந்து உரிமையாளர்களிற்கு வழி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த டெனிஸ்வரன், தற்காலிக அனுமதிப்பத்திரத்துடன் இதுவரை சேவையில் ஈடுபட்ட பேரூந்து உரிமையாளர்களிற்கு நன்றி தெரிவித்ததுடன், இதுவரை காலமும் இதற்காக ஒத்துழைத்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட கணக்களாளர்களிற்கும் அவர் நன்றி தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் நல்ல சேவையை வழங்கவேண்டும் என தெரிவித்த அமைச்சர் எமது மாகாணத்தின் சேவையை பார்த்து ஏனைய மாகாணங்களும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தனது இலட்சியம் எனவும் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் சாரதிகளின் செயற்பாட்டினால் பல்வேறு விபத்துக்களை மக்கள் சந்தித்துள்ளனர். பல உயிர்கள் நாளுக்கு நாள் விபத்தினால் இழக்கப்பட்டன. இனிவரும் காலங்களில் சாரதிகளை பேரூந்து உரிமையாளர்கள் அமர்த்தும்போது, அவர்களிற்கு அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தெரிவித்தார். போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் செலுத்திய பேருந்துகளின் வழி அனுமதப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும் எனவும் அவர் அங்கு குறிப்பிட்டிருந்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...