கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊத்தி கணவனைக் கொலை செய்த மனைவி ஏன் தெரியுமா..?

Share this post:

sad

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள ஹமங்கொடை எனுமிடத்தில் தனது கணவன் மீது மனைவி கொதித்த எண்ணெய்யைக் ஊற்றி தடியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கணவன் மீது கொதித்த எண்ணெய்யைக் கொட்டிய பின்னர் தடியால் அடித்து கொலை செய்ததாகக் கூறப்படும் மனைவி அடிக்கப்பயன்படுத்திய தடியுடன் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

கணவனின் கொடுமை தாங்க முடியாமல் இவ்வாறு தடியால் அடித்து அவரை கொன்று விட்டதாக பொலிஸில் சரணடைந்த அப் பெண் கூறியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கட்டுகஸ்தோட்டை ஹமங்கொடை எனுமிடத்தைச் சேர்ந்த தடோகம கெதர ரொஷான் ஆனந்த என்ற 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கொலை தொடர்பாக பொலிஸில் சரணடைந்த மனைவியை கைது செய்துள்ளதுடன் அவரை கண்டி நீதவான் முன் ஆஜர்செய்ய உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share This:
Loading...

Recent Posts

Loading...