படப்பிடிப்பில் சித்ரவதை செய்கிறார்கள் – ஆபாச வார்த்தைகளால் திட்டுகிறார்கள் பகீர் புகார் கொடுத்த பிரபல நடிகை – யார் அந்த நடிகை…?

Share this post:

bna

செஸ்போர்டு வேட்டை படத்தில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பெரும்பாலான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தி நாயர் நடிகை. சில மாதங்களுக்கு முன்பு பெயரிடப்படாத படம் ஒன்றில் கமிட் ஆகி படபிடிப்பில் சில நாள் கலந்து கொண்டவர் திடீரென மாயமானார்.

சங்கத்தின் கதவை தட்டியது படக்குழு. உடனே, படக்குழு மீது குண்டை தூக்கி போட்டார் நடிகை, படப்பிடிப்பு தளத்தில் வாடி போடி என்று அழைக்கிறார்கள். நான் பெண் என்று கூட பார்க்காமல் என் முன்னிலையிலேயே சக படக்குழுவினரை ஆபாச வார்த்தைகளால் திட்டுகிறார்கள். இருந்தாலும், இந்த சித்ரவதையை சில நாள் தாங்கி கொண்டு படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். ஆனால், இது தொடர்ந்து கொண்டே தான் போகிறது, என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாது.

இதற்காக நான் பெண்கள் நல வாரியத்திற்கு கூட போக முடியும். ஆனால், நான் அப்படி செய்யபோவதில்லை என்று விளக்கம் கொடுத்தார் அந்த நாயர் நடிகை.

படப்பிடிப்பு தளத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக இவ்வாறான விஷயங்கள் நடைபெறுவது இயல்பு. இதனால், இவரை அவர்களது படத்தில் கமிட் செய்து வைத்திருந்த சில இயக்குனர்களும் வாய்ப்பையும் கொடுத்த அட்வான்ஸ் பணத்தையும் வம்படியாக பிடுங்கி விட்டார்களாம். நாளைக்கு நம்ம மேலயும் இந்த பொண்ணு அத பண்றாங்க இத பண்றாங்க னு கம்ப்ளெய்ன்ட் கொடுத்துட்டா என்ன பண்றது என்பதால் தான் இந்த முடிவாம். இதனால், பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளபட்டு விட்டார் அந்த நடிகை.

Share This:
Loading...

Recent Posts

Loading...