நடிகையிடமிருந்து தப்பிக்க போராடும் பிரபல கதாநாயகன்..! – யார் அந்த நடிகர் நடிகைகள்..?

Share this post:

sasa

கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு திட்டக்குடி என்ற படத்தை இயக்கிய சுந்தரன், தற்போது திருவண்ணாமலையை கதை களமாக கொண்டு ரங்கராட்டினம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் மகேந்திரன் நாயகனாவும், புதுமுகம் ஷில்பா நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இவர்கள் தவிர நான் கடவுள் ராஜேந்திரன், ஞானசம்பந்தன், செண்ட்ராயன், வினோதினி, பசங்க சிவகுமார் ஆகியோரும் நடிக்கிறார்கள். செல்வநம்பி இசை அமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார்

படத்தை பற்றி இயக்குனர் சுந்தரன் கூறியதாவது: திட்டக்குடி நல்ல படம் என்று எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால் திட்டக்குடியில் அந்த படத்தை திரையிடவே பெரும்பாடு படவேண்டியது இருந்தது. அதனால் சீரியசான படம் வேண்டாம் என்று ரங்கராட்டினம் என்ற சிரிப்பு படத்தை இயக்கி உள்ளேன்.

திருவண்ணாமலை அருகில் உள்ள குக்கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் வீட்டுக்கு அடங்காத பிள்ளை. ஒரு சின்ன தவறு செய்து பெற்றவர்களுக்கு பெரிய பிரச்சினையை உண்டு பண்ணுகிறார். இதனால் அவர்களுக்கு பயந்து வீட்டைவிட்டு ஓடி திருவண்ணாமலைக்கு வருகிறார். இங்கு நான் கடவுள் ராஜேந்திரன் ஓட்டலில் வேலை செய்கிறார். வந்த இடத்தில் ஹீரோயின் ஷில்பாவை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் ஷில்பாவின் சுயரூபம் தெரிந்து தெறித்து ஓடுகிறார். அவரை விடாமல் துரத்துகிறார் ஷில்பா. அப்பா அம்மா, நான் கடவுள் ராஜேந்திரன், ஷில்பா இந்த மூவரிடமும் வகையாக மாட்டிக் கொண்ட மகேந்திரன் அவர்களிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறோம் என்றார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...